72 வருட சக்தி அரை நொடியில் கிடைக்கும்
ஏன் ஆன்மிகம் என்றால் குரு வேண்டும் என்று சொல்கிறார்கள்? அவரும் நம்மை போல சாதாரண மனிதர் தானே!! அப்படி அவரிடம் என்ன இருக்கிறது? இதற்கான விடை தான் இந்த பதிவு நமக்கு தெரிந்த பிரபலமான ஆசான்களிள் முக்கியமானவர் வள்ளலார், அவரை பின்பற்றுபவர்கள் சன்மார்கிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.
அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், எதை சாப்பிட வேண்டும், எப்படி பழக வேண்டும் என்றெல்லாம் ஏற்கனவே எழுதி வைத்து விட்டு போயிருக்கிறார். அப்படியிருக்க அங்கு குருவுக்கு என்ன வேலை? தியானம் செய்பவர்கள், தியானத்தில் நம்பிக்கை அற்றவர்கள் எல்லோரும் இதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு நபர் தவம் செய்து தனது உயிரை உணர்ந்து, மனதை கடந்து இறைவனை காண்கிறார், அதன் பின் தொடர்ந்து தவம் செய்து தான் சுமந்து வந்த வினைகளை எல்லாம் அழித்து தூய்மையானவராக மாறுகிறார்.
இந்த. நிலையில் இருப்பவர்களை தான் குரு என்று கூறுகின்றோம் மனதை முற்றிலுமாக கடந்து நின்றதால் இவர்களால் நம் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல முடியும், அறிவை உணர்ந்து அதன் மூலமாகிய இறைவனை உணர்ந்ததால், இறைவனை அடைய வேண்டும் என எங்கும் உயிர்களுக்கு சரியான பாதையை காட்ட முடியும்.
இதனால் தான் குரு இல்லா வித்தை குருட்டு வித்தை என்ற வார்த்தை வந்தது, ஒரு குரு ஒரு மாணவரை தேற்றி ஆன்மிக பாதைக்கு பயணப்பட தயார்படுத்த அவர் சேமித்து வைத்து இருந்த தவ ஆற்றலை செலவு செய்கின்றார் இதற்க்கு பெயர் தான் தீட்சை.
தீட்சை பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களின் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை பற்றி இன்னொரு பதிவில் தெளிவாக பார்களாம்.. வள்ளலார் முதன் முதலில் சிதம்பரம் கோவிலில் தான் நிறைய மாற்றங்கள் செய்ய விரும்பினார்.
அண்ணா காரணமோ தெரியவில்லை அது நடைபெறாததால் தனக்கான இடமாக வடலூரை தெரிவு செய்கிறார். அங்கு சத்திய ஞான சபையை நிறுவி சில சட்டதிட்டங்களை போடுகின்றார். ஆனால் அவர் போட்டுவைத்த சட்டங்கள் இப்போது இல்லை. இதனை ஆதாரத்துடன் விளக்குகின்றது இந்த காணொளி.. இதை பார்த்து ஊனங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |