அவமானங்களில் இருந்து நம்மை காக்கும் வாராஹி அம்மன்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.அதில் இன்பம் துன்பம் என்று மாறி மாறி வரும்.மேலும் சிலர் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும்,அவர்களுக்கு அவமானம் என்பது மிக சாதாரணமாக நடந்துவிடும்.
அவர்கள் சரியாகத்தான் இருப்பார்கள் ஆனால் கால சூழ்நிலைகள் அவர்களுக்கு அவமானத்தை தந்து விடும். அந்த அவமானத்தை தாங்கி கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை வரும்.
சிலர் அந்த நேரங்களில் மனம் உடைந்து அவமானம் எப்படி எதிர்கொள்வது என்று தெரியுமால் அழுது புலம்புவது உண்டு.அப்பொழுது அவர்களுக்கு இருக்கும் ஒரே துணை தெய்வம் தான்.
அவர்கள் இந்த வாராஹி அம்மன் வழிபாட்டை, வெள்ளி,செவ்வாய்,ஞாயிற்று தொடங்கலாம்.தொடர்ந்து 21 முறை வாராகி வழிபாடு செய்ய வேண்டும்.
தொடர்ந்து 21 நாள் வழிபாடு செய்யலாம்,அல்லது வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை, 21 வெள்ளிக்கிழமை வழிபாடு செய்யலாம்.
21 செவ்வாய்க்கிழமை, 21 ஞாயிற்றுக்கிழமை என்று விரதம் மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை ஒவ்வொருவரும் மாலை 6:30 மணிக்கு மேல் தொடங்க வேண்டும்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து வாராஹி படம் வைத்து அந்த படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் வாராஹி அம்மனுக்கு நெய்வைத்தியம் வைத்து வழிபடுவது நன்மையை தரும்.வாராஹி அம்மனுக்கு கிழங்கு வகைகள் மற்றும் மாதுளம் வைத்து வழிபாடு செய்ய செய்யலாம்.
இந்த நெய்வைத்தியம் வைத்து வாராஹி அம்மனிடம் மனதார வேண்டிக்கொள்ள நம்முடைய அசிங்கம் அவமானம் எல்லாம் தகர்த்து நம்மை காத்தருள்வாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |