வாழ்க்கை பயத்தை போக்கும் வாராஹி அம்மன் வழிபாடு
பயம் இவை தான் மனிதனின் முதல் எதிரி.எதற்கும் பயம் கொண்டு இருந்தால் வாழ்க்கையை நிம்மதியா வாழ முடியாது.பிறந்த பலனை அடைய முடியாது.சாதித்தவர்கள் எல்லோரும் எல்லா பாதைகளையும் கடந்து வந்தவர்களாக இருப்பார்கள்.
நாம் நினைத்த இலக்கை அடையவேண்டும் என்றால் பல அவமானங்கள் நஷ்டங்கள் பார்த்து ஆகவேண்டும்.அப்படியாக சில மனிதருக்கு இயல்பாகவே இந்த பயம் அதிகம் இருக்கும்.அவர்களுக்கு யாருடைய துணையும் தேவை இல்லை.
அவர்கள் முழுமையாக நம்பவேண்டியது தெய்வம்.இறைஅருள் மட்டுமே நம்மை காக்கும்.அப்படியாக வாராஹி அம்மன் வழிபாட்டை பற்றி கேள்வி பட்டு இருப்போம்.எதிரிகள் தொல்லை பயம் இதில் இருந்து விடுபட வாராஹி அம்மன் வழிபாடு மிகவும் பயன் நம்பிக்கை கொடுக்கும்.
அப்படியாக தேய்பிறை பஞ்சமி திதியில் வாராஹி அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது.இப்பொழுது தேய்பிறை வாராஹி அம்மன் வழிபாடு எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம். வீட்டில் வாராஹி அம்மன் படம் அல்லது சிலை வைத்திருப்பவர்கள் அதற்குரிய பூஜை முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
வாராஹி அம்மன் சிலையை மஞ்சள் தடவிய பலகையில் அமர்த்தி பாலால் அபிஷேகம் செய்து, பின்னர் சாதாரண தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு, மஞ்சள் மாலை சாற்ற வேண்டும். குண்டு மஞ்சள் கொண்டு மாலை தயாரித்து சாற்றுங்கள்.
பின்னர் ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசியை பரப்பிக் கொண்டு பச்சரிசியின் மீது தேங்காயை உடைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு தாம்பூலம் அவசியம்.பின்னர் வாராகிக்கு மலர்களை கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
சக்தி வாய்ந்த பெண் தெய்வங்களுக்கும், பெண் குல தெய்வங்களுக்கும், சிறு தெய்வங்களுக்கும் தேங்காய் தீபம் ஏற்றுவது மரபு. மற்ற பெரிய தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை.பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து 108 முறை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிலை இல்லாதவர்கள் படத்திற்கு அர்ச்சனை செய்யலாம்.அபிஷேகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 108 முறை மந்திரத்தை உச்சரித்து,வாராஹி அம்மனை மனதார பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
வராகி அம்மன் மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!!!
இவ்வாறு வாராஹி அம்மனின் மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்ய மரண பயம் வாழ்க்கை பயம் எதிரிகள் தொல்லை விலகி வாழ்க்கையில் சிறப்படைய முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |