வறுமை மற்றும் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட வழிபட வேண்டிய ஆலயம்
பசி ஒரு கொடிய நோய் போல வறுமையினால் வாங்கும் கடன் மிக பெரிய நோய்.
கடன் வாங்கியவர்கள் கடன் வாங்கிவிட்டோம் என்று நினைத்தே பாதி மனகவலைக்கு உள்ளாகி உடல் நலம் கெடுத்து கொள்வர்.
உண்மையில் உலகத்தில் அனைவருமே கடன்காரர்களே, கடன் படாதவர்கள் எவரும் இல்லை.
நாம் வறுமைக்கு ஆளாகும் பொழுது "கொடிது கொடிது வறுமை கொடிது "என ஒளவையாரும் பாடியிருக்கிறார்.
அப்படியாக துன்பம் என்று வந்து விட்டால் கண்ணீர் சிந்தி கரைந்து போவதை தவிர்த்து இறைவனிடம் சரண் அடைந்து விட்டால் உண்மையில் அதற்கான தீர்வுகள் கிடைக்கும்.
வறுமை கடன் என்னும் பெருந்துன்பத்தில் இருந்து நாம் விடுபட வழிபடவேண்டிய திருத்தலம் திருச்சேறை.
இங்குதான் வறுமை ஒழித்து கடன் நிவர்த்தி செய்யும் ஈசனாக ரின விமோசன லிங்கேஸ்வரர் அமைந்து இருக்கிறார்.
கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்து உள்ளது இக்கோயில், இங்கு இறைவனின் திருப்பெயர் செந்நெறியப்பர், இறைவியின் திருப்பெயர் ஞானவள்ளி ஆகும்.
இந்த கோவிலின் தனி சிறப்பு என்னவென்றால் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரிய கிரகணங்கள் சிவலிங்கத்தின் மீதும் அம்பிகையின் பாதம் மீதும் நேரடியாகபடுகின்றது, அந்நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.
வழிபாட்டு முறை
நம் வறுமை நீங்கி நலம் பெற்று வாழ இங்குள்ள இறைவனை 11 வாரம் திங்கள்கிழமைகள் வழிபட்டு 11வது வாரம் நம் அபிஷேகத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி வழிபட நம் பிரச்சனைகள் அனைத்தும் விலகி செல்வ வளம் பெருகும்.
மேலும், திருக்கோயிலின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இங்கு துர்க்கை, சிவதுர்க்கை வைஷ்ணவி, விஷ்ணு துர்கை என மூன்று வடிவங்களாக காட்ச்சியளிக்கிறார், மேலும் அப்பரால் பாடப்பெற்ற அற்புத திருத்தலமாகும்.
நம் முற்பிறப்பு தீவினை நீங்கி, இப்பிறப்பின் வறுமை நீங்கி செம்மையாக வாழ ரின விமோசன லிங்கேஸ்வரர் வழிபாடு செய்வோம்.