வாழ்க்கையை வளமாக்க வசம்பு பரிகாரம்- யாரெல்லாம் செய்யலாம் தெரியுமா?
பண்டைய காலம் தொட்டு இன்று வரை வீட்டில் உள்ள சமையலறைப் பொருட்களை கொண்டு பரிகாரங்கள் செய்வது வழக்கம்.
அந்த வகையில் கிராம்பு, ஏலம், பட்டை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கூறலாம். இவை பரிகாரங்கள் மட்டுமல்லாது நோய்களை குணப்படுத்தவும் உதவுகின்றது.
இன்னும் சிலர் பரிகாரங்கள் செய்யும் பொழுது என்னென்ன பொருட்களை பயன்படுத்துகிறோம் என்பதை யாரிடமும் சொல்லமாட்டார்கள். ஏனெனின் பரிகாரத்தை வெளியில் சொன்னால் அது பலிக்காது என நம்புகிறார்கள்.
வெளியில் சொல்லாமல் பரிகாரங்கள் செய்ய பயன்படும் பொருட்களில் வசம்பும் ஒன்று.
இதன்படி, வளமான வாழ்க்கையை வாழ என்னென்ன பரிகாரங்களை செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
வசம்பு பரிகாரம்
பொதுவாக ஒருவரது வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்றால் அதற்கு பண வரவு சீராக இருக்க வேண்டும். வீட்டில் எப்போதும் பண வரவு இருந்து கொண்டே இருந்தால் லட்சுமி தேவியின் அருளாள் எப்போதும் கஷ்டம் வராது.
மேற்குறிப்பிட்டதில் எதாவது சிக்கல் வருமாயின் அதனை சரிப்படுத்தும் வேலையை வசம்பு செய்கிறது. இதனை மருந்து கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
வசம்பு வாங்கும் பொழுது எக்காரணம் கொண்டும் பேரம் பேசக் கூடாது.
வாங்கி வந்த வசம்பை சமையலறையில் இருக்கக்கூடிய உப்பு பாத்திரத்திற்குள் வைத்து விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் வீட்டிலுள்ளவர்கள் நோய் பிரச்சினைகள் குறையும். மகாலட்சுமி அம்சம் பொருந்திய உப்புடன் வசம்பு தொடர்புபட்டு இருப்பதால் வீட்டில் எந்நேரமும் பணவரவு இருந்து கொண்டே இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |