தொடங்கும் வசந்த நவராத்திரி- முதல் 5 நாட்கள் ஏன் சுபகாரியங்கள் செய்யக்கூடாது
வசந்த காலத்தை வரவேற்கும் நவராத்திரி என்பதால் சைத்ர நவராத்திரி அல்லது வசந்த நவராத்திரி என்று அழைப்பார்கள். நவராத்திரி என்பது துர்கை அம்மனை ஒன்பது நாட்கள் வழிபடக்கூடிய நிகழ்வாகும்.
ஆதலால், இந்த காலங்களில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வது நமக்கு சிறந்த பலன் கொடுக்கும். அப்படியாக, வசந்த நவராத்திரி வருகின்ற மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
அதோடு இந்த வசந்த நவராத்திரி முடிவில் தான் பகவான் கிருஷ்ணரின் அவதாரமான ஸ்ரீ ராமா பிரான் பிறந்த நாளான ராம நவமி கொண்டாடப்படுகிறது. இந்த வசந்த நவராத்திரி இந்திய முழுவதும் எல்லா இடங்களில் கொண்டாடப்பட்டாலும், குறிப்பாக வட இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்வார்கள்.
இந்த வசந்த நவராத்திரி காலங்களில் துர்காதேவி ஆலயங்களில் நடக்கும் பூஜைகளில் பங்குகொள்ளுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவது அம்பிகையின் ஆசீர்வாதத்தை பெற்று கொடுக்கும்.
மேலும், வசந்த நவராத்திரி காலம் அம்பிகை அசுரனை வெற்றி கொண்ட காலம் என்பதால் சுப காரியங்கள், புதிய தொழில்களை தொடங்கலாம் என்றாலும் நவராத்திரியின் முதல் ஐந்து நாட்களில் எந்த சுப காரியங்களையும் தொடங்கக் கூடாது என்கிறார்கள்.
காரணம், இந்த காலங்களில் நாம் அம்பிகையை மட்டும் மனம் உருகி வேண்டுதல் வைக்கக்கூடிய பொன்னான காலம் ஆகும். அம்பிகையின் அருளையும், அவளின் கருணையும் பெற நாம் கட்டாயமாக இந்த வசந்த நவராத்திரி காலங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்வது வாழும் வாழ்க்கைக்கும் இறந்து மீண்டும் ஒரு பிறவு எடுத்தாலும் அவளின் பரிபூர்ண அருள் கிடைக்க செய்யும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |