ஈசான்ய மூலையில் தலைவாசல் வைக்கலாமா? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

By DHUSHI May 26, 2024 03:30 PM GMT
Report

பொதுவாக ஒரு வீடு கட்டும் பொழுது வாஸ்து பார்ப்பது அவசியம்.

வாஸ்துமுறைப்படி பொருட்களை ஒழுங்கு செய்தால் மாத்திரமே நாம் இருக்கும் வீட்டில் நிம்மதி இருக்கும்.

அந்த வகையில் வாஸ்துவில் இருக்கும் எட்டு திசைகளில் வடகிழக்கு திசை மிக முக்கியமானது. இந்த திசையில் சிவன் ஆட்சியில் இருக்கும் ஈசானிய மூலை அல்லது சனி மூலை இருக்கிறது.

ஈசான்ய மூலையில் தலைவாசல் வைக்கலாமா? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் | Vasthu House Features In Tamil

இந்த மூலை தான் ஒரு வீட்டின் தலை பகுதியாக அமைகிறது. இந்த விடயம் சரியாக பொருந்தி விட்டால் கெட்டது நம் வீட்டு பக்கமே வராது.

அப்படி ஈசானிய மூலையில் என்ன இருக்கிறது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

ஈசானிய மூலை

வீட்டிலுள்ள எட்டு திசைகளிலும் தெய்வங்கள் ஆட்சி செய்கின்றன.

ஈசான்ய மூலையில் தலைவாசல் வைக்கலாமா? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் | Vasthu House Features In Tamil

அதில் ஈசானிய மூலை தான் மிக முக்கியமானது. ஏனெனின் தெய்வங்களுக்கெல்லாம் அதிபதியான சிவன் அங்கு வீட்டிருக்கிறார்.

ஒரு வீட்டை கட்ட ஆரம்பிக்கும் பொழுது முதலில் தென்மேற்கு திசையில் ஆரம்பித்து கடைசியில் ஈசானிய மூலையில் முடிக்க வேண்டும்.

மேலும் முடித்தவுடன் ஈசானிய மூலை எடை குறைவாகவும் சுத்தமாகவும் இருப்ப அவசியம்.

ஈசான்ய மூலையில் தலைவாசல் வைக்கலாமா? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் | Vasthu House Features In Tamil

வாஸ்து சாஸ்த்திரன்படி, வடகிழக்கு மூலை (ஈசான்யம்) வெட்ட வெளியாக அல்லது திறந்த வெளியாக இருக்க வேண்டும். அத்துடன் மனையின் அறைகளை விட தாழ்ந்து இருக்க வேண்டும். இதனை சரியாக அமைத்து விட்டால் எல்லாவிதமான புகழ், செல்வாக்கு, செல்வம், அறிவு, வருமானம் உள்ளிட்ட விடயங்கள் உங்கள் வீட்டில் நிறைந்திருக்கும்.

ஈசானிய மூலை வீட்டிற்கு நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் என்பார்கள். அந்த வகையில் அதிர்வலைகள் தடையில்லாமல் இருப்பது போன்று அமைக்க வேண்டும்.

மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேறும் வகையில் இருக்க வேண்டும். நீர் வெளியே செல்லும் வழி நீண்டிருந்தால் இன்னும் நன்மை சேரும்.   

ஈசான்ய மூலையில் தலைவாசல் வைக்கலாமா? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் | Vasthu House Features In Tamil

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US