தீராத வாஸ்து பிரச்சனையா? இந்த கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்..
வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, வீடு கட்டும் பொழுது அவர்கள் வீடுகளில் கழிவறை, படுக்கையறை, பூஜை அறை போன்றவை சரியான திசையில் அமைந்தால் மட்டுமே அந்த வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
இல்லையென்றால் அவர்கள் வாஸ்து ரீதியாக நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். அந்த வகையில் பெரும்பாலும் எல்லோரும் வாஸ்துவை சரியாக பார்த்து தான் வீடு கட்டுகிறார்கள். ஆனால், சமயங்களில் ஒரு சில இடங்களில் தவறான வாஸ்து அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அவர்கள் வீட்டிற்கு சென்ற நாள் முதல் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். அப்படியாக, வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் அதிகம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? எந்த கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒருவருக்கு வாஸ்து பிரச்சனை இருக்கிறது என்றால் அவர்கள் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் சென்று வழிபாடு செய்தால் வாஸ்துவால் ஏற்படுகின்ற பிரச்சனை யாவும் விலகும்.
மேலும், வாஸ்து ரீதியாக பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.