உங்கள் வீட்டில் யானை சிலை இருந்தால் மறந்தும் இந்த திசையில் மட்டும் வைத்து விடாதீர்கள்
ஜோதிடத்தில் வாஸ்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து ரீதியாக நாம் நிறைய பொருட்களை வீடுகளில் வாங்கி வைப்பதுண்டு. நம் வீடுகளில் ஏதேனும் வாஸ்து குறைகள் இருந்தால் அவை நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. அப்படியாக வாஸ்து பொருட்களில் மிக முக்கியமான பொருளாக யானை சிலைகள் இருக்கிறது.
ஒருவர் வீடுகளில் யானை சிலைகள் வாங்கி வைக்கும் பொழுது அங்கு செல்வ செழிப்பு உண்டாகும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் வாஸ்துரீதியாக நாம் வைத்திருக்கக் கூடிய பொருட்களை ஒரு குறிப்பிட்ட சில திசையில் வைப்பதால் மட்டுமே நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகுவதாக சொல்கிறார்கள் . அப்படியாக வீடுகளில் யானை சிலைகளை எந்த திசையில் வைக்க வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.

ஒருவர் வீடுகளில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் யானை சிலையை வைப்பதற்கு உகந்த இடமாக வடகிழக்கு மூலை இருக்கிறது. இங்கு வைக்கும் பொழுது மிகவும் மங்களகரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக வாஸ்துவில் வடகிழக்கு திசை என்பது மகிழ்ச்சி, ஆன்மீக முன்னேற்றம் பொருளாதார சிறப்பு போன்றவை குறிக்கக்கூடிய திசைகள் ஆகும்.
இந்த திசையில் யானை சிலைகளை வைப்பதால் நம்முடைய வீடுகளில் நேர்மறை ஆற்றல் பெருகி நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அதனால் யானை சிலையானது வட கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

அதோடு யானை சிலையை தென்கிழக்கு திசையிலும் வைக்கலாம். இந்த திசை நம்முடைய கடன் தொல்லைகள் இருந்து விடுபடுவதற்கான அமைப்புகளை பெற்றுக் கொடுக்கும். மேலும் யானை சிலையை வாங்கும் பொழுது அதனுடைய தும்பிக்கையை நாம் சரியாக பார்த்து வாங்க வேண்டும்.
அதாவது யானை சிலையில் தும்பிக்கை உயர்த்திய நிலையில் இருக்க வேண்டும். இந்த சிலைகளை தான் நம் வீடுகளில் வைக்கும் பொழுது நம்முடைய பொருளாதார அடையாளம் எல்லாம் உயர்ந்த நிலைக்கு செல்லும். மேலும் தும்பிக்கை கீழே இருக்கும் நிலையில் யானை சிலையை வீடுகளில் ஒரு பொழுதும் வாங்க கூடாது. அவை நிதி இழப்புகளை உண்டு செய்து விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |