வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும் மூங்கில் செடி
வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை பரப்பும் மூங்கில் செடியை சரியான முறையில் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
மிக வேகமாக வளரும் தாவரமான மூங்கில் செடியை வீடு, பணியிடம் என எல்லாவற்றிலும் வளர்க்கலாம்.
அதிர்ஷ்டம் மட்டுமின்றி காற்றை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது மூங்கில் செடி, இதனால் நோய்த் தொற்றுகளில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம்.
நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் மூங்கிலை வீட்டின் நுழைவாயில் அருகில் வளர்க்க வேண்டும்.
இதற்கு அதிகளவில் தண்ணீர் தேவைப்படாது, பானை அல்லது தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி கொள்கலனில் கூட வளர்க்கலாம்.
சூரிய ஒளியும் குறைந்த அளவே தேவைப்படுவதால் வீட்டின் படுக்கையறையில் கூட வளர்க்கலாம்.
மூங்கில் செடியை 8 அல்லது 9 தண்டுகள் கொண்ட குழுவாக வளர்க்கவும், 4 தண்டுகள் கொண்ட குழுக்கள் துரதிஷ்டத்தை கொண்டு வரும்.
எந்த திசையில் வளர்ப்பது?
வாஸ்துப்படி வீட்டின் கிழக்கு மூலையில் மூங்கிலை நடவேண்டும், வீட்டின் நுழைவாயில் முன்பாகவும் வளர்க்கலாம்.
தென்கிழக்கில் வளர்ப்பது செல்வத்தை ஈர்க்கும், மறந்தும்கூட நேரடியாக சூரிய ஒளிபடும்படி வளர்க்க வேண்டாம்.
2 அல்லது 3 அடி உயரம் கொண்ட மூங்கில் செடியை சிவப்பு நாடாவால் கட்டி வைப்பது தொழிலில் வெற்றியை தேடித்தரும்.