வாஸ்து: வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
வேத சாஸ்திரங்களில் வாஸ்து சாஸ்திரம் முக்கிய இடம் பிடிக்கிறது.
நாம் தங்கியிருக்கும் வீடு எப்படி இருக்க வேண்டும் எந்த திசையில் அமைக்கப்பட வேண்டும் என்பனக் குறித்து வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
அந்தவகையில், வாஸ்துப்படி வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
வீட்டின் வாயில் கதவு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். லட்சுமி தேவி பெரும்பாலும் இரவு வேளைகளில் குறிப்பாக பௌர்ணமி இரவில் வீட்டிற்கு வருவதாக நம்பப்படுகிறது.
செல்வத்திற்கு அதிபதியாக திகழும் குபேரனுக்கு உகந்த திசையாக வடக்கு திசை உள்ளது. அதனால வீட்டின் வடக்கு திசையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வீட்டின் பூஜை அறை எப்போதும் வெளிச்சத்துடன் இருக்க வேண்டும். பூஜை அறைகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும்.
வீட்டில் பயன்படுத்தப்படும் துடைப்பத்தை நிமிர்த்தி வைக்க கூடாது. துடைப்பம் எப்போதும் படுக்க வைக்கப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும்.
இரவு உறங்கும் போது சரியான திசையில் தலையை வைத்து உறங்க வேண்டும். அதாவது தலை எப்போதும் தெற்கு நோக்கி இருக்குமாறு தூங்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |