வீட்டில் இந்த 5 விஷயங்களை சரி செய்தால் போதும் அதிர்ஷ்டம் தேடி வரும்
ஜோதிடம் பொறுத்த வரையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை சரியாக வாஸ்து பார்த்து செய்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். காரணம், வாஸ்து சரி இல்லை என்றால் அந்த வீட்டில் பல பிரச்சனைகளை சந்திக்க கூடும்.
அதாவது நாம் வசிக்கும் இடத்தில் நிம்மதியை இழக்க செய்யும். மேலும், வாஸ்து சரி இல்லாமால் போக, கடவுள் அருள் கிடைப்பதில் தடை உண்டாகி விடும். அப்படியாக, வாஸ்து சரி இல்லை என்றால் உருவாகும் சங்கடத்தில் இருந்து விடுபட வீட்டில் செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1. வாஸ்து சரி இல்லை என்றால் முதலில் நமக்கு நிதி பிரச்சனையை உண்டாக்கும். திடீர் என்று நம் பொருளாதாரத்தில் சில சிக்கலை சந்திக்கக்கூடும்.
2. அதே போல், உடல் ஆரோக்கியமாக இருந்தவர்களுக்கு, ஆரோக்கிய குறைபாடு உண்டாகும்.
3. எந்த நல்ல காரியம் தொடங்கினாலும் அதில் தடைகளும், தடங்கலும் உண்டாகும். செய்யும் காரியங்கள் தோல்வியில் முடியும்.
4. சிலர் வீடுகளில் பழைய பொருட்களை கழிக்காமல் வீட்டிலேயே வைத்திருப்பார்கள். அதுவும் வாஸ்து தோஷம் உண்டு செய்யும்.
5. வீட்டை எவ்வளவு சுத்தம் செய்தாலும் ஒட்டடை சேர்ந்து கொண்டே இருக்கும். அதுவும் வாஸ்து குறைபாட்டை குறிக்கும் விஷயமாகும்.
இவ்வாறு வாஸ்து குறைபாடு இருந்தால், வீட்டின் தென்கிழக்கு திசையில் கணபதி சிலையை வைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதை பின் பற்றுவதால் நம் வீடுகளில் உள்ள வாஸ்து குறைபாடு விலகும் என்று நம்பப்படுகிறது.
அதே போல், வீட்டின் வடகிழக்கு திசையில் சூரியன் அல்லது நதியின் படத்தை வைப்பதும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதோடு வீட்டின் பிரதான நுழைவாயிலில் ஒரு கருப்பு குதிரை லாடத்தை வைக்கலாம்.
வீட்டில் கருப்பு குதிரை லாடத்தை வைப்பது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் வாஸ்து குறையை நீக்க வீடுகளை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி சாம்பிராணி தூபம் காண்பிப்பது நல்ல முன்னேற்றமும் நிவாரணம் கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |