வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?
கடிகாரம் என்பது நேரத்தை காட்டும் பொருள் மட்டும் அல்லாமல் வீட்டில் உள்ள முக்கியமான அம்சமாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்க படுகிறது.
அதன் படி ஒருவர் வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டினால் வீட்டில் செல்வ வளம் மற்றும் நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
சிலர் வீட்டில் நேரத்தை அவர்களுக்கு ஏற்றார் போல் முன்னும் பின்னுமாக அவர்கள் வசதிக்கு ஏற்ப வைத்திருப்பார்கள்.உண்மையில் நாம் வீட்டில் ஓடும் கடிகாரத்தை அப்படி செய்வது நன்மை அல்ல.
ஏன் என்றால் தாமதமாக கடிகாரம் ஓடும் பொழுது வீட்டில் பொருளாதார நஷ்டம் மற்றும் எதிர்மறை ஆற்றல் நிரம்ப கூடும்.ஆக சரியான நேரம் காட்டும் வகையில் நேரத்தை எப்பொழுதும் வைக்க வேண்டும்.
மேலும் கடிகாரத்தில் எதாவது விரிசல் ஏற்பட்டு உடையும் நிலையில் இருந்தால் அதை உடனே மாற்றி விட வேண்டும்.
நமது வீட்டில் கடிகாரத்தை கிழக்கு நோக்கி உள்ள பகுதில் சுவரில் மாட்டி வைப்பது நன்மை தரும்.ஜோதிடத்தில் கிழக்கு திசையை சொர்கத்தின் அதிபதியான இந்திரனின் திசை என்கிறார்கள்.நாம் அந்த திசையில் கடிகார மட்டும் பொழுது வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
கிழக்கு திசையில் மாட்டும் கடிகாரம் வட்டமாகவும் அல்ல சதுரமாகவோ இருந்தால் நல்லது.
நாம் கடிகாரத்தை வீட்டில் உள்ள வடக்கு திசையில் மட்டும் பொழுது செல்வ வளம் பெருகுகிறது.ஏன் என்றால் வடக்கு திசை குபேரன் உகந்த திசை.அங்கு நாம் கடிகாரம் மட்டும் பொழுது வீட்டில் பண தட்டுப்பாடு சீராக இருக்கும் என்று நம்ப படுகிறது.
கிழக்கு மட்டும் வடக்கு திசையில் கடிகாரத்தை மாட்ட முடியாதவர்கள் மேற்கு திசையில் மாட்டி கொள்ளலாம்.
ஆனால் நாம் ஒரு போதும் தெற்கு திசையில் கடிகாரத்தை மாட்ட கூடாது.தெற்கு திசை எமனுக்கு உரிய திசை.என்கிறார்கள் ஜோதிட நிபுணர்கள்.
ஆக நாமும் வீட்டில் நேரத்தை காட்டும் கடிகாரத்தை சரியான திசையிட் மாட்டி வைத்து வீட்டில் நேர்மறை ஆற்றல் கொண்டு நிரப்புவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |