எதிரிகள் அடியோடு ஒழிய வேகுப்பட்டி அனுமனை தரிசனம் செய்யுங்கள்
நமக்கு நேரம் சரியில்லை என்றால் நெருங்கியவர்கள் கூட எதிரியாக மாறி விடுவார்கள். அந்த வகையில் தீராத எதிரிகளால் பிரச்சனையை சந்திப்பவர்கள் வேகுப்பட்டியில் அமைந்திருக்கக்கூடிய அனுமனை வழிபாடு செய்தால் எதிரிகள் அடியோடு அழிந்து விடுவார்கள். அதை பற்றி பார்ப்போம்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் வேகுப்பட்டியல் 21 அடி உயரத்தை கொண்ட பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது. இந்த ஆலயம் கடந்த 2014 ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட்டது.
அன்று முதல் இந்த கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சனிக்கிழமைகளில் அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் அங்கு சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் இந்த கோவிலுக்கு தவறாமல் வந்து விடுவார்கள்.

இந்த கோவிலில் ஆஞ்சநேயர் 21 அடி உயரம் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். மிகவும் உயரமான மற்றும் வலிமைமிக்க ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு மன அமைதியும் மன வலிமையும் கிடைப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.
குறிப்பாக நீண்ட நாட்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய தடை தோஷம் மற்றும் எதிரிகளால் ஏற்படக்கூடிய தொல்லைகள் கடன் சுமை மன அழுத்தம் இவைகளிலிருந்து விடுபடவும் இந்த அனுமன் நமக்கு அருள் வழங்குகிறார் என்று அங்கு இருக்கக்கூடிய பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இதனால் "கடன் எதிரி தொல்லை தீர்க்கும் தலம்" என்ற பெயரால் வேகுப்பட்டி ஆஞ்சநேயர் ஆலயம் அறியப்பட்டு வருகிறது. இதனை அறிந்து பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து இங்கு இருக்கக்கூடிய அனுமனை வழிபாடு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |