வெள்ளைக்கிழமை சுக்கிர பகவான் வழிபாட்டின் சிறப்புகள்
வாழ்க்கையில் வளர்ந்து படித்த நல்ல வேலைக்கு சென்ற பின் மனதிற்கு பிடித்த ஒரு வரன் அமையாமல் திணறுபவர்கள் வெள்ளிக்கிழமை சுக்கிர பகவான் வழிபாடு செய்தால், தடைகளை நீக்கி மனதிற்கு பிடித்த துணையுடன் சேர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை.
மேலும் திருமணம் ஆகி கணவன் மனைவி பிரிந்து வாழும் தம்பதியினர் சுக்கிரனை வழிபட பிரச்சனைகள் விலகும்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சென்று காலை 6-7.30 மணிக்குள் நவக்கிரகங்களில் ஒருவரான சுக்கிர பகவானை வழிபாடு செய்தல் வேண்டும்.
கோயிலுக்கு சென்று சுக்கிர பகவானுக்கு தீபம் ஏற்றியும் வழிபாடு செய்வதால் கூடுதல் நன்மை உண்டாகும்.சுக்கிர பகவானை வழிபாடு செய்த பின் நவகிரக தியானம் செய்யலாம்.
அதை செய்யும் பொழுது பல நன்மைகள் உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும் உண்டாகும்.
ண்கள் மட்டுமல்ல ஆண்களும் சுக்கிர பகவானை வழிபாடு செய்யலாம் ஆண்கள் வழிபாடு செய்தால் நல்ல மனைவி கிடைப்பார் என்றும் பெண்கள் சுக்கிர பகவான் வழிபாடு செய்ய நல்ல கணவன் கிடைப்பார் என்றும்ஆன்மீக தகவல் சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |