ராசியை மாற்றும் சுக்கிரபகவான்: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களில் அழகு, செல்வம், காதல், திருமண வாழ்க்கை, கலை, ஆடம்பரம் மற்றும் சுகபோகங்களின் காரக கிரகமாக சுக்கிர பகவான் கருதப்படுகிறார்.
ஒருவரின் பொருளாதார வளம், கலைத் திறன் மற்றும் உறவுகளின் முன்னேற்றத்தில் சுக்கிரனின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில், ஜூலை 4ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி அடைந்து, ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அங்கு தங்கியிருந்து பின்னர் கன்னி ராசிக்குள் நுழைவார்.
இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக சில ராசிக்காரர்கள் நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அப்படி அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

சுக்கிரன் மேஷ ராசியின் 5-வது வீட்டிற்கு பெயர்ச்சி அடைவதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலம் தொடங்குகிறது.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சில விஷயங்கள் இப்போது சாதகமாக நடக்க வாய்ப்பு அதிகம். குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு இது மிகவும் நல்ல காலமாக இருக்கும்.
கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்து, தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான முயற்சிகளிலும் முன்னேற்றம் காணலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் சூழல் உருவாகும்.
கடகம்

சுக்கிரன் கடக ராசியின் 2-வது வீட்டிற்கு வருவதால், பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக இருந்து வந்த பணப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, நிதி நிலைமை சீரடையும்.
வருமானம் அதிகரிப்பதுடன், சேமிப்பும் உயர வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத வகையில் சில பணவரவுகளும் கிடைக்கலாம்.
பணியிடத்தில் உங்கள் திறமை மற்றும் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வீடு தேடி வரும்.
சிம்மம்

சுக்கிரன் சிம்ம ராசியின் முதல் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் ஆளுமை மேலும் பிரகாசிக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து, மற்றவர்களிடம் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். அவர்களின் ஊக்கத்தால் முக்கியமான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குறிப்பாக நிதி நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.