வீட்டில் பண கஷ்டம் தீர வெற்றிலை தீபம்

By Sakthi Raj Apr 19, 2024 07:39 AM GMT
Report

வாழ்க்கை வாழ கண்டிப்பாக பணம் மிக அவசியமான ஒன்று. ஆனால் பண தட்டுப்பாடு ஏற்பட பல மனக்கஷ்டங்கள் உருவாகும்.

ஒரு மனிதன் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தோடு இருக்கின்றான் என்பதற்கு அவனின் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது.

நம் வீட்டில் செல்வம் பெறுக மஹாலக்ஷ்மியை வணங்குவோம்.மேலும் நம் வீடுகளில் காலை மாலையில் விளக்குகள் ஏற்றுவதுண்டு.

அப்படியாக நம் பண பிரச்சனைகளில் இருந்து விடுபட வெற்றிலையில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நம் பண கஷ்டம் படி படியாக குறையும் என்கின்றனர்.அதை பற்றி பார்ப்போம்.

வீட்டில் பண கஷ்டம் தீர வெற்றிலை தீபம் | Vettrilai Deepam Parigaram Mahalakshmi Manthiram

இந்த வழிபாட்டை மேற்கொள்ள ஒரு வெற்றிலையும், சின்ன மண் அகல் விளக்கும் போதுமானது.. மண் அகலில் பசு நெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

திரி மஞ்சள் நிறத்தில் இருக்க கொஞ்சமாக மஞ்சள் தூளில் தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி இந்த திரியை போட்டு பிசைந்த நிலையில் காய வைத்தால் மஞ்சள் திரி தயாராகிவிடும்.

மஞ்சள் செல்வம் தரும் குரு பகவானுக்கு உகந்தது.

வீட்டில் பண கஷ்டம் தீர வெற்றிலை தீபம் | Vettrilai Deepam Parigaram Mahalakshmi Manthiram

இந்த விளக்கை மாலை 6 மணிக்கு ஏற்ற வேண்டும். வீட்டின் நிலை வாசலுக்கு உள்பக்கத்தில் மகாலட்சுமியை நினைத்து ஒரு தட்டின் மேல் வெற்றிலையைக் கழுவி, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதன் மேலே இந்த அகல் விளக்கில் நெய் ஊற்றி, மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

சந்திராஷ்டமம் காலங்களில் நாம் கட்டாயமாக இதை செய்யக்கூடாது

சந்திராஷ்டமம் காலங்களில் நாம் கட்டாயமாக இதை செய்யக்கூடாது


அந்த வெற்றிலையின் மேல் மகாலட்சுமிக்கு நைவேத்தியமாக இரண்டு கற்கண்டுகளை வைத்து தீபம் ஏற்றி மனமுருகி மகாலட்சுமியை வணங்கவேண்டும். விளக்கை நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் ஏற்றக் கூடாது.

நிலை வாசலுக்கு உள்பக்கத்தில் கிழக்கு பார்த்தவாறு இந்த விளக்கை ஏற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த விளக்கின் முன்பு அமர்ந்து திருவிளக்கு மந்திரம் தெரிந்தால் சொல்லி, ‘மகாலட்சுமி தாயே வருக வருக’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

வீட்டில் பண கஷ்டம் தீர வெற்றிலை தீபம் | Vettrilai Deepam Parigaram Mahalakshmi Manthiram

அந்த கற்கண்டுகளை எடுத்து நிலை வாசலுக்கு வெளியில் இரண்டு பக்கத்திலும் போட்டு விடுங்கள். அதை எறும்புகள் வந்து சாப்பிட்டால் குடும்பத்திற்கு மிக மிக நல்லது.

தினமும் இந்த விளக்கை ஏற்ற முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டுமாவது ஏற்றினால் மகாலட்சுமி நிச்சயம் மனம் மகிழ்ந்து வரங்களை கொடுப்பாள்.

தினமும் பழைய வெற்றிலையை மாற்றி புது வெற்றிலையில்தான் தீபமேற்ற வேண்டும். ஆனால், அதே மண் அகல் விளக்கைத் துடைத்து தினமும் தீபம் ஏற்றலாம்.

பண வரவு வேண்டும் என்பவர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றினால் பண வரவு நிச்சயம் ஏற்படும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US