அனைத்து பிரச்சனைகள் தீர இந்த ஒரு எளிய பரிகாரம் போதும்
யாருக்கு துன்பம் இல்லை.எந்த ஒரு இதிகாசங்கள் அல்லது கடவுள் புராணங்கள் எடுத்து கொண்டாலும் அதில் துன்பம் இன்பம் மாறி மாறி வருவதை நாம் பார்க்க முடியும்.அதில் மனிதர்கள் மட்டும் விதி விலக்கு இல்லை.நாமும் வாழ்க்கையில் நாம் செய்த மற்றும் செய்யாத தவறுகளுக்கு சமயங்களில் தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
அந்த நேரத்தில் நாம் நம்முடைய பலத்தை இழந்து ஏன் இந்த வாழ்க்கை என்ற விரக்தி ஏற்பட்டு விடும்.அப்படியான நேரத்தில் நாம் யாரையும் நம்பாமல் இறைவனை சரண் அடைந்து அவனை முழுமையாக நம்புவது மட்டுமே நமக்கு ஒரு நல்ல பிடிப்பும் நம்பிக்கையும் கொடுக்கும்.
அந்த வகையில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் இதை செய்ய அது ஒரு நல்ல தீர்வு கொடுக்கும்.அது தான் விளக்கு ஏற்றுதல் .எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீபம் ஏற்ற மனம் லேசாகுவதை நாம் பார்க்க முடியும்.
நாம் வீட்டின் பூஜை அறையிலோ கோவிலில் இறைவன் சன்னதி முன்பாகவோ அகல் விளக்கு ஒன்றை ஏற்றி வழிபட்டால் போதும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.ஏன் என்றால் இந்த தீபத்தில் நவக்கிரகங்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.அதாவது
அகல் விளக்கு- சூரியன்
நெய் அல்லது எண்ணெய்- சந்திரன்
திரி- புதன் விளக்கில்
எரியும் சுடர்- செவ்வாய்
சுடரில் உள்ள மஞ்சள் நிறம்-குரு
சுடரின் கீழே விழும் நிழல்- ராகு
தீபத்தால் பரவும் வெளிச்சம் -கேது (ஞானம்)
எரிய எரிய திரி குறைவது - சுக்ரன் (ஆசை)
சுடர் அணைந்தாலும் இருக்கும்
கருமை- சனி
இப்படி ஒரு அகல்விளக்கில் அனைத்து நவக்கிரகங்களும் வாசம் செய்கின்றன.இன்பம் துன்பம் தான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டால் மனதில் சமநிலை உண்டாகும்.
ஆசைகள் குறையும்,உண்மை நிலை புரியவரும்.அந்த புரிதலே நம்மை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தி செல்லும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |