விநாயகர் துதியும் துணையும்

By பிரபா எஸ். ராஜேஷ் Oct 05, 2024 05:30 AM GMT
Report

 இந்து சமயத்தில் கடவுளர்களுக்கு பல பெயர்கள் அவர்களின் பண்பை விளக்கும் வகையில் உள்ளன. இவற்றுடன் ஓம் மற்றும் போற்றி ஆகியவற்றைச் சேர்த்து 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் பக்தர்கள் கோவிலைச் சுற்றி வரும் போது மனதுக்குள் சொல்லி வரலாம்.

 பொருள் புரியாத பாஷையில் துதிகளைச் சொன்னால் அவை மனதில் நிற்காது. குருட்டு மனப்பாடமாகத் தான் சொல்ல வேண்டும். உச்சரிப்பும் சரியாக இருக்க வேண்டும்.

பொருள் புரிந்து சொன்னால் அது இறைவனைப் போற்றுவதாகவும் இறைவனின் இனிய பண்புகளைப் பற்றி சிந்திப்பதாகவும் அமைந்து நம் உடலில் செரோடோனின் போன்ற feel good harmonesகளைச் சுரக்கச் செய்யும். அப்போது மனமும் உடம்பும் உற்சாகம் பெறும்.

விநாயகர் துதியும் துணையும் | Vinayagar 16 Names In Tamil

சிறுவர்களையும் இறைத் துதிகளை மனப்பாடம் செய்யும்படி பழக்க வேண்டும். இளம் வயதிலேயே நல்வழியில் பயணிக்க இறைப்பற்று உதவும். இப்பயணம் வாழ்வின் இறுதி வரை அவர்களுக்கு மனதில் நம்பிக்கையும் நிம்மதியும் தரும். மன அழுத்தமோ கவலையோ வராது.

விரல் பிடித்து நடக்கும் விநாயகர் இருக்கும்போது பிள்ளைகளுக்கு எந்த கவலையும் இல்லை. கடவுள்களை காமிக்ஸ் மூலமாக அறிமுகம் செய்தால் நகைச்சுவை உணர்வும் கற்பனை கதாபாத்திரம் என்ற எண்ணமும் மட்டுமே வரும். பக்தி வராது.

விநாயகருக்கு 108 பெயர்கள் 1008 பெயர்கள் என்று இருந்தாலும் கூட அர்த்தம் புரிந்து சொல்ல கூடிய 54 (துதிகளை) பெயர்களை மட்டும் இங்குக் காண்போம். பெயர்களின் அர்த்தம் அடைப்புக் குறிக்குள் உள்ளது)

விநாயகர் துதியும் துணையும் | Vinayagar 16 Names In Tamil

1.ஓம் கணேசாய போற்றி _ (கணங்களின் தலைவன்)

2.ஓம் ஏக தந்தாய போற்றி - (ஒரே தந்தம் உடையவன்)

3.ஓம் கணபதியே போற்றி - (கணங்களின் தலைவன்)

4.ஓம் ஹேரம்பனே போற்றி - (ஐந்து முக கணபதி)

5.ஓம் விநாயகா போற்றி - (சிறந்தவன்)

6.ஓம் அங்குசதாரி போற்றி -(அங்குசம் வைத்திருப்பவன்)

சதுர்த்தி விரதம் - நோக்கும் போக்கும்

சதுர்த்தி விரதம் - நோக்கும் போக்கும்


7.ஓம் ஒற்றை கொம்பனே போற்றி

8.ஓம் கஜ முகனே போற்றி - (கஜ - யானை)

9.ஓம் கஜானனே போற்றி (யானை முகத்தோனே)

10.ஓம் லம்போதரனே போற்றி (பெரிய வயிறு உடையவனே)

11.ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி (வக்ரங்களைத் துண்டாக்குவோன்)

12.ஓம் அத்தி முகத்தோனே போற்றி (அசதி - அத்தி என்றால் யானை)

13.ஓம் ஜேஷ்டராஜனே போற்றி (மூத்தவன் )

14.ஓம் முறக் கன்னனே போற்றி (முறம் போன்ற காது- கர்ன- காது)

15.ஓம் அம்பிகை தனயனே போற்றி (அம்பிகையின் மகன்) 

விநாயகர் துதியும் துணையும் | Vinayagar 16 Names In Tamil

16.ஓம் வரதா போற்றி (வரம் தருபவன்)

17.ஓம் முதல்வா போற்றி

18.ஓம் வித்யா கணபதி போற்றி (கல்வியின் நாயகன்)

19.ஓம் விக்ன விநாயகனே போற்றி (சிக்கல்களைத் தீர்ப்பவன்)

20 ஓம் சித்தி புத்தி விநாயகா போற்றி (சித்தி, புத்திகளின் கணவன்) 

21.ஓம் மகோதரனே போற்றி (பெரிய வயிறுடையவன்)

22.ஓம் விஜய விநாயகா போற்றி (வெற்றி வீரன்)

23.ஓம் ஆனை முகத்தோனே போற்றி

24.ஓம் வேழ முகத்தோனே போற்றி (வேழம் என்றால் யானை)

புரட்டாசி விரதம் - நோக்கும் போக்கும்

புரட்டாசி விரதம் - நோக்கும் போக்கும்


25.ஓம் மோதகப் பிரியனே போற்றி (கொழுக்கட்டை பிரியன்) 

26.ஓம் தும்பிக்கை ஆழ்வாரே போற்றி (வைணவர் இவ்வாறு அழைப்பர்)

27.ஓம் நர்த்தன கணபதியே போற்றி (ஆடல் நாயகன்)

28.ஓம் மாங்கல்ய ஈசனே போற்றி (மாங்கல்ய பாக்கியம் அருள்பவன்)

29.ஓம் விக்னேஸ்வரனே போற்றி (விக்கினங்களை தீர்ப்பவன்)

30.ஓம் பார்வதி புத்ரா போற்றி (பார்வதியின் மைந்தன்) 

விநாயகர் துதியும் துணையும் | Vinayagar 16 Names In Tamil

31.ஓம் கௌரி மைந்தா போற்றி (கௌரியின் மகன்)

32.ஓம் கன்னி மூலை கணபதியே போற்றி ( தென்மேற்கு மூலைக்கு உரியவன்)

33.ஓம் மகா கணபதி போற்றி 34.ஓம் வினைதீர்த்தான் போற்றி

35.ஓம் ஹரி மருகா போற்றி (திருமாலின் மருமகன்)

36.ஓம் செல்வ கணபதி போற்றி

37.ஓம் குமார கணபதி போற்றி

38.ஓம் சக்தி கணபதி போற்றி

39.ஓம் மகாகணபதி போற்றி

40.ஓம் யானைமுக கணபதி போற்றி  

41.ஓம் துர்கா கணபதி போற்றி

42.ஓம் பிரளயம் காத்த விநாயகா போற்றி

43.ஓம் பொல்லா பிள்ளையார் போற்றி (உளி கொண்டு செதுக்காதவர்)

44.ஓம் மணக்குள விநாயகர் போற்றி (பாண்டிசேரியில் உள்ளவர்)

45.ஓம் முக்குறுணி விநாயகா போற்றி (மதுரையில் உள்ளவர்)

46.ஓம் ஐங்கரனே போற்றி (ஐந்து கைகளை உடையவர்)

47.ஓம் தேவதேவா போற்றி

48.ஓம் தேவ ரக்ஷகா போற்றி (தேவர்களைக் காப்பவர்)

சிவபெருமான் வரலாறும் வழிபாடும்

சிவபெருமான் வரலாறும் வழிபாடும்


49.ஓம் மங்கள மூர்த்தி போற்றி 50.ஓம் மிருத்யுயஞ்சயா போற்றி (மரணத்தை வென்றவர்)

51.ஓம் சுரேஷ்வரா போற்றி (தேவர்களின் தலைவன்)

52.ஓம் வரகுண கணபதியே போற்றி (வரங்கள் தரும் குணவான்)

53.ஓம் விஸ்வ ராஜா போற்றி (உலகத்துக்கே அரசன்)

54.ஓம் யோகாதிபா போற்றி (யோகங்கள் அதிபதி)

(அடுத்த கட்டுரை வருவதற்குள் இந்த துதிகளை மனனம் செய்யுங்கள். பிள்ளைகளையும் பிடிக்க வையுங்கள்).

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US