விநாயகர் சதுர்த்திக்கு முன் கொண்டாடப்படும் கௌரி பூஜை பற்றி தெரியுமா?
விநாயகர் சதுர்த்தி நாளை (07.09.2024) கொண்டாடப்படுகிறது, அப்படியாக நாளை கொண்டாட்டத்திற்கு முன் கௌரி பூஜை அதற்கு முந்தைய நாள் செய்வார்கள். இதை பற்றி பலருக்கும் தெரியாது அதை பற்றி பார்ப்போம்.
விநாயகர் சதுர்த்தி எப்போது கொண்டாடப்பட்டாலும், அதற்கு ஒருநாள் முன் கெளரி கொண்டாட்டம் விமர்சையாக கொண்டாடப்படும்.இது இந்தியாவில் கர்நாடகாவில் மிக பிரபலமாகவும் (கெளரி ஹப்பா), தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் இந்த கெளரி பூஜை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
இந்த கௌரி கொண்டாட்டாட்டம் ஏன் என்று பலருக்கு தெரியாது அதை பார்ப்போம். கணபதிக்கு உயிர் கொடுத்த கெளரியை கொண்டாடும் விதமாக இந்த கெளரி கொண்டாடம் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
திருமணமான பெண்கள் இந்த விரதம் மற்றும் பூஜை செய்வது மேற்கொள்ளலாம்.மஞ்சள் நிறத்தில் கடைகளில் விற்கப்படும் பார்வதி உருவத்தை வாங்கி ஒரு கலசத்தின் மீது வைத்து வழிபடலாம்.
அல்லது நாம் மஞ்சளை அரைத்து அதை அம்மன் உருவமாக, தேங்காய் மீது உருவாக்கலாம். அதனை கலசத்தின் மீது வைத்து பூஜை செய்து வழிபடலாம்.
கலசத்தில் மஞ்சள் கலந்த நீர் வைத்து, அதன் மீது மாவிலை வைத்து, அம்மன் உருவம் பிடித்த தேங்காயை அதன் மீது வைத்து, அலங்கரித்து பூஜிக்கலாம்.
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் குழந்தை செல்வம் ,பிள்ளைகளுக்கு கணபதி போன்ற நல்ல அறிவுச் செல்வம் விரைவில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |