விநாயகர் சதுர்த்தி அன்று தரிசிக்க வேண்டிய தமிழகத்தின் டாப் 5 கோவில்கள்
நம் வாழ்க்கையில் சந்திக்கும் தடைகளை அகற்றி அருள் வழங்கக் கூடியவர் விநாயகப் பெருமான். இவர் அவதரித்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகின்றோம். இந்த நாளன்று நாம் வீடுகளில் விநாயகர் சிலையை வாங்கி வைத்து வழிபாடு செய்வோம் அல்லது விநாயகப் பெருமான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வோம்.
பொதுவாக விநாயகப் பெருமானின் வழிபாடு செய்ய தொடக்கி விட்டால் நம் வாழ்க்கையில் உள்ள தோஷங்களும் தடைகளும் விலகுகின்றது. அப்படியாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று வரவிருக்கிறது.
அன்றைய தினம் நம் தமிழகத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த விநாயகப் பெருமான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் நம் வாழ்க்கையில் மிகச் சிறப்பை பெற்றுக் கொடுக்கும். அந்த வகையில் விநாயகப் சதுர்த்தி அன்று நாம் வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான டாப் 5 கோவில்கள் பற்றி பார்போம்.
1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்:
மிகப் பழமையான குகை கோவில்களில் இந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் முதன்மை வகிக்கிறது. இங்கு இவர் கையில் சிவலிங்கத்தை ஏந்திய படி மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்கு சென்று வழிபாடு செய்ய நம் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் விலகி தெளிவும் ஞானமும் பிறக்கும்.
2. மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில்:
விநாயக பெருமான் கோவில்களில் மலைக்கோட்டைஉச்சி பிள்ளையார் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. இக்கோயில் திருச்சி மலைக்கோட்டை மீது விநாயகப் பெருமான் கோவில் கொண்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி அன்று தமிழகத்தில் விநாயகப் பெருமானுக்கு பெரிய அளவில் கொழுக்கட்டை நெய்வேத்தியமாக படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும் கோயில் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலாகும்.
3. ஈச்சனாரி விநாயகர் கோவில்:
கோயம்புத்தூரில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில் இது மிகவும் புகழ்பெற்ற ஒரு கோவிலாகும். அதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். இக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவர நிச்சயம் வாழ்க்கையில் திருப்பம் உண்டாகும்.
4. மணக்குள விநாயகர் கோவில்:
தமிழகத்தில் எல்லையில் புதுச்சேரியில் இக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான வரலாறுகளையும் சிறப்புகளையும் கொண்டது. மனக்குல விநாயகர் கோவில் இங்கு ஒரே ஆலயத்தில் 108 விநாயகர்களை நாம் தரிசனம் செய்ய முடியும்.
5. ஆதி விநாயகர் கோவில்:
திருவாரூரில் திலதர்ப்பணபுரிக்கு அருகில் முக்தீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள இக்கோயில். இங்கு விநாயகர் மனித முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதனால் இவரை ஆதி விநாயகர் என்றும் நரமுக விநாயகர் என்றும் பக்தர்கள் அழைத்து வழிபாடு செய்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







