விநாயகர் தோப்புக்கரணம் பின்னால் இருக்கும் சுவாரசிய நிகழ்வு
விநாயகரை வணக்க வேண்டும் என்றாலே நமக்கு முதலால் நினைவிற்கு வருவது தோப்புக்கரணம் தான்.அதாவது அவரை அவ்வாறு வழிபாடு செய்தாலே அவர் சந்தோசம் கொள்வர் என்பது அனைவரின் நம்பிக்கை.அப்படியாக விநாயகர் தோப்புக்கரணம் வர ஒரு சுவாரசிய நிகழ்வு ஒன்று இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.
தோப்புக்கரணம் என்றால் கைகளால் காதுகளைப் பற்றிக் கொண்டு, விநாயகர் முன் செய்யும் ஒருவகை வழிபாடு ஆகும்.இதை நாம் விநாயகரை வழிபாடு செய்யும் பொழுது மட்டும் தான் கடைபிடிப்போம்.பிற தெய்வங்களுக்கு தோப்புக்கரணம் போடுவதில்லை.
அந்தவகையில், விநாயகருக்கு ஏன் தோப்புக்கரணம் போட்டு வழிபடுகிறோம் என்று பார்க்கலாம். ஒருசமயம் விஷ்ணு மிகவும் களைப்பாக இருக்க அசந்து தூங்கிய நேரத்தில் அவரை எழுப்பி விட விநாயகர் சக்கரத்தைப் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்.
மருமகனான விநாயகரிடம் சக்கரத்தை வாங்க விஷ்ணு பகவானால் அதட்டி, மிரட்டி கேட்க முடியாது. எனவே, விநாயகரிடமிருந்து அதை வாங்க மகாவிஷ்ணு இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு கீழும் மேலும் குதித்தார்.
வித்தியாசமான இந்தச் செயலைப் பார்த்த பாலவிநாயகர் விழுந்து விழுந்து சிரிக்க, சக்ராயுதம் வெளியே வந்து விழுந்தது. மகாவிஷ்ணு மகிழ்வாக அதை எடுத்துக் கொண்டார். இதன் மூலம் விநாயகரை மகிழ்விக்க புது வழிபாட்டு முறையாக இதை நாம் பின்பற்றுகிறோம்.
இதுவே நாம் விநாயகரை மகிழ்வித்து வழிபாடு செய்யும் தோப்புக்கரணம் பின்னால் இருக்கும் சுவாரசிய நிகழ்வு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |