விநாயகர் ஞானப்பழம் பெற்ற திருத்தலம்
வேலூர், ராணிப்பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளது இந்த வில்வநாதேஸ்வரர் திருக்கோயில்.
இத்தலத்தில் ஈசனின் பெயர் வில்வநாதேஸ்வரர், அம்பிகை பெயர் வல்லாம்பிகை.
இக்கோயிலின் பிரசாதமான வில்வத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள், மந்த புத்தி நீங்கும் என்பதும் நம்பிக்கை.
இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். அவரின் துதிக்கையில் மாங்கனி ஒன்று உள்ளது.
முருகனுக்கும் விநாயகருக்கும் சிவபெருமான் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் அந்த ஞானப் பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.
பக்தனை காப்பதற்காக ஈசனை நோக்கி அமராமல் கோயிலின் வாயிலை நோக்கியவாறு பிரம்மாண்டமாக மிகப்பெரிய நந்தி உள்ளது. அதற்கு ஒரு புராண வரலாறும் உண்டு.
கஞ்சன் மலையிலிருந்து திருவல்லத்திற்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்ய தீர்த்தம் கொண்டு வரும் அர்ச்சகரை கஞ்சன் என்பவன் தொல்லை செய்ததாகவும், சிவபெருமானின் வாகனமான நந்தி கஞ்சனை எட்டு பாகங்களாக கிழித்தார் எனவும், சிவபெருமானிடம் இறவா வரம் பெற்றிருந்த கஞ்சன் அவ்விடம் விட்டு ஓடிவிட்டார் என்றும் தலபுராணம் கூறுகிறது.
அத்துடன் இறவாமல் இருக்கும் கஞ்சன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்க நந்தி தேவர் கோயிலின் வாசலை நோக்கியவாறு இருக்கிறார் என தல வரலாறு கூறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |