வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்ட பயன்படுத்த வேண்டிய எளிய நீர் பரிகாரம்

By Sakthi Raj Jul 08, 2026 05:30 AM GMT
Report

நீரின்றி கட்டாயமாக இந்த உலகத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது. நீர் நம்முடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பதை தாண்டி எதிர்மறை ஆற்றல்களை அடியோடு அழிக்கும் சக்தி வாய்ந்தது.

அதனால், தான் நீரை தெய்வமாக வழிபாடு செய்கின்றோம், புனித நீர்களில் நீராடும் பொழுது நம்முடைய பாவங்கள் கரைகிறது என்கிறார்கள். அப்படியாக, நீரைக் கொண்டு வீடுகளில் தீய சக்திகளை விரட்டக்கூடிய எளிய பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

2026: ஆடி மாதப்பிறப்பு எப்பொழுது? இந்த மாதத்தில் என்ன செய்யவேண்டும்? செய்யக்கூடாது

2026: ஆடி மாதப்பிறப்பு எப்பொழுது? இந்த மாதத்தில் என்ன செய்யவேண்டும்? செய்யக்கூடாது

1.சூரிய ஒளியில் நீர் வைத்து தெளிக்கும் முறை:

நாம் ஒரு பானை அல்லது குவளையை எடுத்துக்கொண்டு அதில் நிறைய நீர் நிரப்பி அதை சூரியனுக்கு கீழ் வைத்துவிட வேண்டும்.

பிறகு அந்த நீரை மாவிலை கொண்டு வீடு முழுவதும் தெளித்து விஷ்ணு பகவானுடைய மந்திரத்தை சொல்லி வர, வீட்டிற்குள் இருக்கக்கூடிய எந்த ஒரு தீய சக்திகளும் விலகிவிடும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது.

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்ட பயன்படுத்த வேண்டிய எளிய நீர் பரிகாரம் | Water Salt Remedies To Remove From Negative Energy

2. உப்பு நீரை வாயிலில் வைப்பது:

நம்முடைய ஆன்மீக சாஸ்திரத்தில் உப்பு மிகப்பெரிய அளவில் எதிர்மறை ஆற்றலை விளக்கக் கூடியது. ஒரு கிண்ணம் நீரில் கல் உப்பினை போட்டு அதை வாயிலில் வைத்து விட வேண்டும்.

அதனை அகற்றி விட்டு வேறு ஒரு நீரை ஊற்ற வேண்டும். காரணம், அந்த நிறம் மாற்றம் என்பது வீட்டில் இருக்கும் தீய சக்திகளை உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டது.

2026: சுக்கிரன் மீது குரு பார்வை..உருவாகும் லாப திருஷ்டி ராஜயோகம்.. வசந்த காலம் யாருக்கு?

2026: சுக்கிரன் மீது குரு பார்வை..உருவாகும் லாப திருஷ்டி ராஜயோகம்.. வசந்த காலம் யாருக்கு?

3. உப்பு பரிகாரம்:

சில வீடுகளில் அடுக்கடுக்காக கஷ்டங்கள் பொருளாதார நெருக்கடிகள் இழப்புகள் ஏற்படும். அவர்கள் வீடுகளில் எத்தனை மூளைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு காகிதத்தில் சிறிது உப்பினை கட்டி வைத்து விடுங்கள்.

அதிகாலை எழுந்து யாரிடமும் பேசாமல் அந்த காகித உப்பினை எடுத்து ஓடும் தண்ணீரில் விட்டு விட்டால் அனைத்து தீமைகளும் தண்ணீருடன் கரைந்து விடும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US