ஒரு வாரத்தில் வரும் ஏழு கிழமைகளுக்கும் தனித்தனி பலன்கள் உள்ளன.
அந்த வகையில், ஏழு கிழமைகளில் ஒவ்வொரு நாளும் ஆடை அணிவதற்கு கூட ஒரு நிறம் உள்ளது.
உதாரணமாக, வெள்ளிக்கிழமை என்பது இந்து மதத்தில் புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஒரு குடும்பத்திற்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் மகாலட்சுமி தேவிக்கு உகந்த நாளாகவும் உள்ளது.
இந்த தினத்தில் மகாலட்சுமிக்கு பிடித்தது போன்று நடந்து கொண்டால் வழக்கமாக கிடைக்கும் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அவரது நல்லாசியை பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் சில விடயங்களை கவனத்தில் கொள்வது நல்லது.
செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியின் அருளை பெற நினைப்பவர்கள் என்னென்ன விடயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
நிறத்தின் மகிமை
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு பிடித்த நிறமான மூன்று நிறங்களில் ஆடைகள் அணியலாம். இதனால் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் கிடைக்கும்.
வண்ணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்களுக்கான பலன்களை அள்ளிக் கொடுக்கிறது. சில வண்ணங்களில் ஆடைகள் அணியும் பொழுது நமக்கு இவ்வளவு நாட்களாக இருந்த கவலைகளையும் துக்கங்களையும் மறைந்து போகும்.
அதே சமயம், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அப்படியான நேரங்களில் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் ஆடைகள் அணியலாம்.
இப்படி அணியும் ஒருவருக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைக்கும். அத்துடன் மன அமைதி, அன்பு, அதிர்ஷ்டம் என பலருக்கும் தேவைப்படுகின்ற விடயங்கள் உங்களுக்கு இயற்கையாகவே கிடைக்கும். வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை ஆடைகளை அணிவது மங்களத்தின் அடையாளம் என இந்து சமயம் கூறுகிறது.
மகாலக்ஷ்மிக்கு மட்டுமின்றி, சுக்ர பகவானுக்கும் உரிய நாளாக இந்த கிழமை இருப்பதால் அவரின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







