மனிதனின் ஏழு வகை பிறவிகளும் அவ்வற்றின் குணநலன்களும் என்ன?
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் மனிதர்களுக்கு மறு பிறவி இருக்கிறது என்று நம்பப்படுகிறது.அதாவது மனிதனின் நல்வினை தீவினை முடியும் வரை அவர்களின் பிறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்கிறார்கள்.
ஒரு மனிதன் அவன் செய்த தர்ம நெறிக்கு ஏற்ப தேவர்களாக, மனிதர்களாக, மிருகங்களாக, பறவைகளாக, நீரில் வாழ்வனவாக, ஊர்வனவாக, தாவரங்களாகப் பிறப்பு எடுப்பார்கள். அவ்வாறு ஏழு விதமாக பிறக்கும் பொழுது அவர்களின் குணாதிசயங்கள் எல்லாம் மாறுபடுகிறது.
தேவர்கள் மனிதராகப் பிறந்தால் எப்போதும் சிவபெருமானையும் சக்தியையும் வணங்குவார்கள். தான, தர்மங்கள் செய்வார்கள். குருவைப் போற்றி மரியாதையோடு நடந்து கொள்வார்கள். அதே போல் மனிதர்கள் மனிதராகப் பிறந்தால் தவம் செய்வார்கள்.
கடந்த பிறவியில் செய்த பாவபுண்ணிய கணக்குகள் கொண்டும் அவர்கள் கற்ற பாடங்கள் வைத்தும் "தான்" என்ற அகங்காரம் இல்லாமல் எல்லோரிடத்திலும் அன்பாக, பண்பாகவும் நடந்து கொள்வார்கள். மிருகங்கள் மனிதராகப் பிறக்கும் பொழுது கோபங்கள்,எதையும் யோசித்து முடிவு எடுக்காமல் போதல் போன்ற விஷயங்களை கொண்டு இருப்பார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு பிறவிகளுக்கு மனிதனுக்கு மாறுபடுகிறது. நம் பிறவி என்பது நாம் அறியாமல் கடவுள் நமக்கு கொடுத்து நம்மை பூமிக்கு அனுப்புவது.மனிதன் மட்டும் அவன் கணக்கு மட்டுமே இந்த பூமியில் உள்ளது என்பது இல்லை.
பூமியில் விழும் ஒவ்வொரு விதைகளுக்கும்,கண்ணுக்கே தெரியாமல் வட்டமிடும் பூச்சிகளுக்கும் இந்த பூமியில் மனிதனை போல் சம உரிமை உண்டு.அவர்களின் கணக்குகளும் இறைவனால் கணக்கு எடுக்க பட்டுக்கொண்டு இருக்கிறது.ஆக எத்தனை பிறவி எடுத்தாலும் தர்மநெறி தவறாமல் வாழ்வதே மனிதனின் குணங்களாக இருக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |