அட்சய திருதியை அன்று கட்டாயம் தங்கம் வாங்க வேண்டுமா?
நம்முடைய ஜோதிடத்தில் அட்சய திருதியை என்பது மிக சிறந்த அதிர்ஷ்ட நாளாக பார்க்கப்படுகிறது. மேலும் அன்றைய தினம் எந்த ஒரு காரியம் செய்தாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. அது மட்டும் அல்லாமல் வீடுகளில் செல்வம் செழிக்க அட்சய திருதியை திருநாளில் நம்மால் முடிந்த அளவு தங்கம் வாங்கினால் நமக்கு யோகம் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
பலரும் அட்சய திருதியை என்றால் அன்றைய தினம் தங்கம் தான் வங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். தங்கம் வாங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு பெருந்தொகை தேவை படும்.
அட்சய திருதியை அன்று எல்லோராலும் தங்கம் வாங்கி சேர்க்க முடியுமா? என்று கேட்டால் கட்டாயம் இல்லை. அதோடு தங்கம் வாங்கினால் உண்மையில் வீடுகளில் காலம் காலமாக செல்வம் சேருமா?
அன்றைய தினம் தங்கத்திற்கு பதிலாக வேறு என்ன பொருட்கள் வாங்கலாம் என்று அட்சய திருதியை பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பாலாறு ஸ்வாமிகள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |