மேற்கு பார்த்தப்படி வீட்டின் முகப்பு இருந்தால் என்ன நடக்கும்?
பொதுவாக ஒரு வீட்டை அமைக்க திட்டமிடும் பொழுது வீட்டின் முகப்பு எந்த திசையை பார்த்தப்படி இருக்க வேண்டும் என்பதை தான் முதலில் தீர்மானிப்பார்கள். இதன் பின்னரே ஏனைய விடயங்கள் தீர்மானிக்கப்படும்.
அந்த வகையில் வாஸ்துப்படி, வீட்டின் முகப்பு வடக்கு மற்றும் கிழக்கு திசைகளை பார்த்தப்படி இருந்தால் பலன் அதிகம் என்றும் இதனை தவறும் பட்சத்தில் மனைகளின் பலன் சற்று குறைவானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேற்கு திசையை பார்த்தப்படி வீட்டின் வாசல் இருக்கும் பொழுது அற்புதமான வாழ்க்கை வாழ முடியும்.
மேலும் வருண பகவான் நினைக்கும் போதெல்லாம் எப்படி மழை வழங்குகிறாரோ அதே போல் வீட்டில் எந்நேரமும் போகம் விளைந்து கொண்டே இருக்கும்.
இது போன்று மேற்கு திசையில் வீட்டின் முகப்பு இருந்தால் வேறு என்னென்ன பலன்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேற்கு பார்த்த மனைகள்
மேற்கு பார்த்த மனைகளை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் வழி மேற்கு புறமாக இறங்கி வடக்கு வழியாக செல்வது போன்று இருக்க வேண்டும். இந்த அமைப்பு இல்லாவிட்டால் அந்த மனையில் குடியேறுவதை தவிர்க்கவும்.
புதிதாக வீடு கட்டும் ஒருவர் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளை அடிப்படையாக வைத்தே வீட்டின் இடங்களை தீர்மானிக்க வேண்டும். அப்போது தென்கிழக்கு, வடமேற்கு திசைகளில் தரை அமைப்பை உடைக்கக்கூடாது.
வாஸ்து சாஸ்திர விதிகளின் படி, மேற்கு பார்த்த மனைகளில் அற்புதமான ஐஸ்வரியங்கள் நிறைந்திருக்கும். இதற்கான முக்கிய காரணம் மேற்கில் ஒரு பகுதியை சனி பகவான் ஆட்சி செய்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.