செவ்வாய்க்கிழமை என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? ரகசிய சூட்சுமங்கள்

By Sakthi Raj Jul 31, 2026 02:00 PM GMT
Report

பொதுவாகவே, செவ்வாய்க்கிழமை என்றால் பலரும் இந்த நாட்களில் நாம் நிறைய நல்ல விஷயங்கள் செய்வதை தவிர்த்து விட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், செவ்வாய்க்கிழமை என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி பார்ப்போம்.

செவ்வாய் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது அன்றைய தினம் நாம் அதிக அளவில் செலவு செய்யக்கூடாது. அதேபோல், வீட்டில் இருக்கக்கூடிய எந்த ஒரு பொருட்களையும் செவ்வாய் தினத்தில் நாம் தூக்கி வெளியே போடுவதை தவிர்த்து விட வேண்டும்.

செவ்வாய்க்கிழமை நாம் கடன் வாங்குவதையும் ஒருவருக்கு கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது, செவ்வாய்க்கிழமை தங்கத்தை தவறியும் அடமானம் வைக்க கூடாது.

செவ்வாய்க்கிழமை என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? ரகசிய சூட்சுமங்கள் | What Can We Do And Donts On Tuesday

சித்தர்களைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு அதிகம் இருக்கும்?

சித்தர்களைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு அதிகம் இருக்கும்?

செவ்வாய்க்கிழமை புதிய வீடு மாறுதல், பூமி பூஜை செய்தல் போன்றவை செய்தால், பண இழப்பு, குடும்ப தலைவர் பாதிப்பு போன்றவை கொடுக்கக்கூடும். செவ்வாய்க்கிழமை அன்று சிவப்பு நிற ஆடை அணிந்து அங்காரக காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வது உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமை அன்று வீரபத்திர சுவாமியை வழிபாடு செய்து பிரசாதமாக வழங்க கூடிய எலுமிச்சை நாம் உட்கொள்வது தீய சக்திகளின் ஆற்றலை குறைக்கும்.

ராகு தோஷம் விலகி உடனடியாக திருமணம் நடக்க செய்ய வேண்டிய 10 பரிகாரங்கள்

ராகு தோஷம் விலகி உடனடியாக திருமணம் நடக்க செய்ய வேண்டிய 10 பரிகாரங்கள்

செவ்வாய்க்கிழமை அன்று இரவு நேரங்களில் ஏழைகளுக்கு ரகசியமாக எண்ணெய் தானம் செய்வது குடும்பத்தில் மன அமைதியை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் முக்கியமான வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது மிகச் சிறந்த அளவில் வெற்றியை நமக்கு பெற்றுக் கொடுக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US