2026: மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி. ஆகஸ்ட் 2 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?

By Sakthi Raj Jul 31, 2026 07:33 AM GMT
Report

 ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கக்கூடிய செவ்வாய் பகவான் தான் ஒரு மனிதனுடைய வீரம், கோபம், தன்னம்பிக்கை, ஆளுமை திறன் கணவன் மற்றும் சகோதரர்களை குறிக்கக்கூடிய கிரகமாக உள்ளது.

அந்த வகையில், செவ்வாய் பகவான் சுமார் 45 நாட்கள் ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி புதன் பகவானுடைய வீடான மிதுன ராசிக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகிறார்.

அவர் செப்டம்பர் 18ஆம் தேதி வரை மிதுனத்திலேயே சஞ்சரிக்க உள்ளார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு எல்லா விதத்திலும் நன்மையாக அமையப்போகிறது என்று பார்ப்போம்.

2026: மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி. ஆகஸ்ட் 2 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? | 2026 August 2 Mars Transit In Gemini Prediction

அதிர்ஷ்டத்தை வழங்கும் இரு கிரக இணைப்புகள்..உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

அதிர்ஷ்டத்தை வழங்கும் இரு கிரக இணைப்புகள்..உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

 

மேஷம்:

மேஷ ராசியினருக்கு மூன்றாவது விடாக தைரியஸ்தானத்திற்கு செவ்வாய் பகவான் செல்கிறார். இதனால் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்க போகிறது. உங்களுடைய தன்னம்பிக்கை இரட்டிப்பாக கூடிய வாய்ப்புகளை உருவாக்கப் போகிறது.

வேலை தொடர்பாக நீங்கள் மேற்கொள்கின்ற பயணம் மிகச்சிறந்த லாபத்தையும் வெற்றியும் கொடுக்கப்போகிறது. அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும்.

மிதுனம்:

மிதுன ராசியில் அவருடைய ஜென்ம ராசிக்கு செவ்வாய் பகவான் நுழைகிறார். இதனால் இவர்களுக்கு ஆற்றலும் தன்னம்பிக்கையும் சுறுசுறுப்பு உருவாகும்.

இவர்களுடைய திறமை இந்த காலகட்டங்களில் எல்லோரும் கவனிக்கும் படியாக வெளிப்படும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, திடீர் இடம் மாற்றம் போன்ற அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும்.

எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் கைநீட்டி உதவி கேட்காத ராசிகள் யார் தெரியுமா?

எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் கைநீட்டி உதவி கேட்காத ராசிகள் யார் தெரியுமா?

கன்னி:

கன்னி ராசியினருக்கு பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்திற்கு செவ்வாய் பகவான் வருகிறார். இதனால் இவர்களுக்கு தொழில் வாழ்க்கையில் மிக உயர்ந்த உச்சத்தை தொடக்கூடிய காலகட்டமாக அமையப்போகிறது.

உழைப்பிற்கு ஏற்ற பலன்களை இவர்கள் எந்த தடையும் இல்லாமல் பெறப்போகிறார்கள். பொருளாதாரத்தில் முன்பை விட மிக சிறந்த பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு செவ்வாய் பகவான் வருகிறார். இதனால் இவர்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல நேர்மறையான ஆற்றல் வரப்போகிறது. எதிர்பாராத லாபம் உண்டாகும்.

கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மறைமுக எதிரிகள் தொல்லை முற்றிலும் விலகும். தேவையற்ற வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US