சாலையில் இறந்த காகத்தை பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா? சகுனத்தின் கூற்று
எதிர்காலத்தில் நிகழக்கூடிய பல்வேறு சகுனங்களை காகங்கள் முன்கூட்டியே சொல்லும் என்று நம்பப்படுகிறது.
திடீரென்று காகம் பறந்து வந்து உங்கள் முன் அமர்ந்திருப்பதைக் கண்டால் அது நல்ல காரணங்களுக்காகவும் இருக்கலாம், தீய காரணங்களுக்காகவும் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
ஏனெனில், இந்து மதத்தில் காகம் நம் மூதாதையராகக் கருதப்படுகிறது. அதனால் தான் காகத்திற்கு படையல் வைக்கிறோம்.
சனியின் வாகனமான காகத்தை பார்த்தால், அது சுப மற்றும் அசுபமான அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம்.
அதேபோல், சாலையில் எங்காவது இறந்த காகத்தை பார்ப்பது கெட்ட சகுனமாகக் கருதப்படுகிறது.
செத்த காக்கையைப் பார்த்தால் உங்கள் முன்னோர்கள் உங்கள் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
இறந்த காகம் ஒருவரின் மரணத்தை முன்பே அறிவிக்கிறது என்று சொல்லப்படுகிறது.
சாலையில் இறந்த காகத்தை பார்த்தால், எதிர்காலத்தில் வாழ்க்கையில் ஒரு நெருக்கடி இருக்கப் போகிறது என்று அர்த்தம்.
மேலும், இறந்த காகத்தை பார்த்தால், சனி சில காரணங்களால் உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்றும் அர்த்தம்.
எனவே, இறந்த காகத்தை பார்த்தால் உடனடியாக சனி பகவான் கோயிலுக்கு சென்று மன்னிப்பு கேட்டு தீபம் ஏற்றி விடுங்கள்.
இது முன்னோர்களின் கோபத்தையும் தணிக்கும் என சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |