கனவில் குழந்தை வந்தால் என்ன பலன்
ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது தான் கனவுகள் வரும்.அப்படியாக சிலருக்கு வித்யசமான கனவுகள் வருவதுண்டு.
உதாரணமாக நேரில் ஒருவரை பார்த்திருக்கமாட்டோம்.ஆனால் அவர்கள் கனவில் வருவதுண்டு.அப்படி வரும் கனவுகளுக்கு பலனும் இருக்கிறது.
அப்படியாக ஒருவர் கனவில் குழந்தை வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம். ஒருவருக்கு குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக நன்மை நிறைந்த செயல்கள் நடக்கும்.
குழந்தைகள் கனவில் வந்தால் வரவுகள் அதிகமாக வரும்.
வேலை இல்லாமல் வேலை தேடி கொண்டு இருந்தால் அவர்கள் கனவில் குழந்தை வர விரைவில் நல்ல வேலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
உடல் நோயால் மிகவும் அவதிப்படுவோர் குழந்தை உருவத்தினை கனவில் கண்டால் கண்டிப்பாக நோயிலிருந்து விடுபடலாம்.
குழந்தைகள் கனவில் தோன்றினால் இடம் அல்லது வீட்டிற்கு பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் வரும். குழந்தை கனவு வந்தால் பதவி உயர்வு கிடைக்கும்.
புதிதாக வீடு அமையும் வாய்ப்பு குழந்தை கனவில் தோன்றினால் கிடைக்கும்.
பொதுவாக குழந்தைகள் கனவில் வர அது நன்மையே குறிக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |