மந்திரங்களை தவறாக பாராயணம் செய்தால் என்ன நடக்கும்?

By Sakthi Raj Feb 18, 2026 01:00 PM GMT
Report

இறை வழிபாட்டில் மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்வது என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் பலரும் மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்வது என்பதை கடினமாக கருதுகிறார்கள்.

காரணம் நாம் தவறாக மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நமக்கு தோஷம் அல்லது கடுமையான பிரச்சனைகள் வந்து விடுமோ என்ற பயத்தினால் தவிர்த்து விடுகிறார்கள். அப்படியாக நாம் மந்திரங்கள் பாராயணம் செய்து வழிபாடு செய்யும் பொழுது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

மந்திரங்களை தவறாக பாராயணம் செய்தால் என்ன நடக்கும்? | What Happens If We Mispronounce Mantras In Worship

நாளைய ராசி பலன் (19-02-2026)

நாளைய ராசி பலன் (19-02-2026)

இங்கு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு காரியமும், நம்முடைய சிந்தனையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அந்த வகையில் நாம் மந்திரங்களை மறதியில் தவறுதலாக பாராயணம் செய்தாலும் நம்முடைய சிந்தனையும், நம்முடைய இறை நோக்கமும் சரியாக இருக்கின்ற நேரத்தில் நாம் வேண்டிய வரமும் காரியமும் கட்டாயம் நமக்கு கிடைக்கும்.

இருப்பினும் நாம் மந்திரங்களை சரியாக தெரிந்து புரிந்து கொண்டு பாராயணம் செய்வதே சிறந்தது. அதனால் மனதில் இறைவனுடைய சிந்தனையும் வேண்டுதலும் சரியாக இருந்து எந்த காரியம் செய்யும் பொழுது கட்டாயம் அதில் எந்த ஒரு பாதிப்பும் வரப்போவதில்லை.

2026 மாசி மகம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?

2026 மாசி மகம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?

மேலும், இங்கு நாம் மனதை ஒருநிலை செய்து வழிபாட்டில் ஈடுபடுவதே முக்கியம் ஆகும். அதில் வரும் சில தவறுகளை கட்டாயம் இறைவன் பெரிது படுத்துவதில்லை. ஆனால் ஒரு பொழுதும் உதாசீனம் செய்வதாக மட்டும் எந்த ஒரு மந்திரத்தைகள் பாராயணம் செய்யக்கூடாது. அது கட்டாயம் ஒரு மிகப்பெரிய அளவில் பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US