திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு ஒருவருக்கு எப்பொழுது கிடைக்கும்?

By Sakthi Raj Jan 02, 2026 01:00 PM GMT
Report

 மனிதர்களுக்கு எப்பொழுதுமே திடீர் துன்பம் வந்தால் அதை விரும்புவது இல்லை. ஆனால் திடீர் என்று வரக்கூடிய அதீத மகிழ்ச்சி இவை எல்லாம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானவை. அதனால் அவை அவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் நிரந்தரமாக அல்லது அடிக்கடி நடக்க வேண்டும் என்ற ஒரு கற்பனையில் அவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

அதிலும் ஒரு சிலருக்கு திடீர் என்று நமக்கு அதிர்ஷ்டம் கிடைத்து ஒரு மிகப்பெரிய அளவில் பணக்காரராக நாம் மாறிவிட மாட்டோமா என்ற ஒரு கற்பனை எல்லாம் இருக்கும். ஆக மனிதர்கள் நாம் எல்லோருமே ஒரு மாயையாக திடீர் என்று வாழ்க்கை மாறக்கூடிய ஒரு நிலையை தான் பல நேரங்களில் எதிர்பார்க்கிறோம்.

அப்படியாக இந்த அதிர்ஷ்டமானது நமக்கு இந்த உருவத்தில் வந்தால் மட்டுமே அவை அதிர்ஷ்டமாக மனிதர்களுடைய மனம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மனநிலையில் இருக்கிறது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்ற பல அதிர்ஷ்டங்களை அவர்கள் கவனிக்க தவறி விடுகிறார்கள். அப்படியாக உண்மையில் அதிர்ஷ்டம் என்றால் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு ஒருவருக்கு எப்பொழுது கிடைக்கும்? | What Is Fate And Luck How Is It Working 

2026 புது வருடம் அதிர்ஷ்டமாக மாற இந்த ஒரு விஷயம் செய்ய மறக்காதீர்கள்

2026 புது வருடம் அதிர்ஷ்டமாக மாற இந்த ஒரு விஷயம் செய்ய மறக்காதீர்கள்

அதிர்ஷ்டம் என்ற ஒரு வார்த்தையே பொன், பொருள், பணம் என்று செல்வ நிலையில் தான் உருவப் படுத்தி பார்க்கப்படுகிறது. ஆனால் இறைவன் ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டத்தை எப்பொழுதும் செல்வம் வழியாகவே கொடுத்து விடுவதில்லை.

உதாரணமாக திடீர் என்று ஒருவர் ஒரு பிரயாணம் மேற்கொள்கிறார். அப்பொழுது அவர் புறப்படுகின்ற பேருந்தை இவர் பிடிப்பதற்கு சற்று காலதாமதம் ஆனதால் இவர் அந்த பேருந்தை தவற விடுகிறார். ஆனால் அந்த பேருந்து ஒரு விபத்துக்கு உள்ளாகிறது என்றும் அதில் பயணித்த பல பேர் மரணித்ததாகவும் ஒரு செய்தி வருகிறது என்றால் இந்த நேரத்தில் அந்த நபருடைய மனதில்  தோன்றக்கூடிய ஒரு வாக்கியம் "அதிர்ஷ்டவசமாக" நான் இன்று தப்பிவிட்டேன்.

உண்மைதான் அந்த மனிதருக்கு பேருந்தில் பயணித்த அத்தனை நபருகளுக்கு இடையே அந்த நாளில் இந்த நபருக்கு தான் அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. இவருக்கு தான் இன்னும் அவர் வாழ வேண்டிய காலங்களும், செய்ய வேண்டிய கடமைகளும் நிறைய இருக்கிறது என்று ஒரு காரணத்தினாலே இறைவன் அவரை காப்பாற்றி விடுகிறார்.

அப்படியே, இன்னொரு உதாரணமாக ஒருவருக்கு இக்கட்டான ஒரு பண தட்டுப்பாடு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் தனக்கு துன்பம் வந்துவிட்டது என்று வருந்துவது ஒரு பக்கமாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் அவர் ஒரு தொகையை செலுத்தாவிட்டால் இவருடைய முக்கியமான பொருள் ஒன்றை இழக்க நேரும் என்ற ஒரு நிலை இருக்கின்ற நேரத்தில் திடீரென்று எதிர்பாராத நபரிடம் இருந்து அவருக்கு ஒரு பண வசதி கிடைக்கிறது என்றால் அதுவும் அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் தான். ஆக அதிர்ஷ்டம் என்பது கண் முன்னால் பொன் பொருள் செல்வம் போன்ற நிலையில் மட்டுமே எப்பொழுதும் வரவேண்டும் என்பது அல்ல அதிர்ஷ்டம் சில நேரங்களில் இந்த மாதிரியான ஒரு நிலையில் கூட வரலாம்.

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு ஒருவருக்கு எப்பொழுது கிடைக்கும்? | What Is Fate And Luck How Is It Working

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு துன்ப காலம் எப்பொழுது முடிவிற்கு வரும்?

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு துன்ப காலம் எப்பொழுது முடிவிற்கு வரும்?

அதனால் எந்த ஒரு நிலை வந்தாலும் தர்மம் தவறாது நம்முடைய கடமையை சரியாக செய்து வாழ்ந்தால் நிச்சயம் நம் வாழ்க்கையிலும் அடிக்கடி இவ்வாறான அதிர்ஷ்டம் நடப்பதை நாம் பார்க்கலாம்.

அதோடு இந்த உலக இயக்கம் மிகவும் அற்புதமானது.இங்கு எந்த ஒரு மனிதனையும் எந்த ஒரு காலகட்டத்திலும் அவர்களை தனி மரமாக விட்டு விடுவதில்லை. அவ்வாறு ஒரு மனிதன் தனி மரமாக நிற்கிறான் என்றாலும் அவனை அவனுடைய எதிர்காலத்திற்கு தயார் செய்யக்கூடிய நிலைக்காக மட்டுமே இந்த பிரபஞ்சம் அவனை அந்த நிலையில் நிறுத்தி இருக்குமே தவிர்த்து இந்த உலகத்தில் எதுவும் காரணம் காரியமின்றி செயல்படுவதில்லை.

ஒரு காகம் நம்முடைய வீட்டை கடந்து செல்லும் பொழுது கரைகிறது என்றாலும் அதற்கு பின்னால் எழுதப்பட்ட விதி என்ற ஒன்று இருக்கிறது. அதனால் தவறான கற்பனையில் நமக்கு அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய நல்ல விஷயங்களை நாம் கட்டாயம் பார்க்க தவறவிடாமல் இந்த பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தமறவாமல் வாழ்வது அவசியம்.

பல இக்கட்டான நிலையிலும், ஏதோபிறவியில் செய்த புண்ணியம் நம்மை பல நேரங்களில் காத்து நின்று இருக்கிறது என்பதற்காக சாதாரணமாக நாம் எதையும் எடுத்து விடாமல் இன்னும் கவனமாக நம்முடைய வாழ்க்கையை கவனித்து ஒவ்வொரு விஷயத்தையும் சரியாக கையாண்டு நன்றி செலுத்தி வாழ்ந்தோம் என்றால் விதி முடிந்து மறுபிறவி கிடைத்தாலும் அந்த புண்ணியமானது நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு கடினமான காலங்களிலும் செய்த புண்ணியயும் நம்மை காத்துக் கொண்டே இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US