மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையில் விதி, அதிர்ஷ்டம் இந்த இரண்டு வார்த்தைககளும் அதிகப்படியாக உபயோகப்படுத்தக் கூடிய வார்த்தைகளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக விதி என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகின்றோம்.
இருந்தாலும் சிலருக்கு இந்த விதியை பற்றிய சந்தேகங்கள் இருக்கிறது. இந்த விதியானது எவ்வாறு செயல்படுகிறது? இந்த அதிர்ஷ்டம் எவ்வாறு கிடைக்கிறது என்று பலருக்கும் பல குழப்பங்கள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
இந்த உலகத்தில் காலம் காலமாக சொல்லக்கூடிய ஒரு வார்த்தைகளில் நல்லவர்கள் தான் அதிகம் துன்பப்படுவார்கள் என்று. ஒரு சிலர் நிறைய தான தர்மங்கள் செய்வார்கள். ஆனால் அவர்கள் அதற்கு அதிகப்படியான துன்பத்தையும் அனுபவித்து விடுவார்கள். அவர்களைப் பார்த்து அவர்களே நிறைய நேரங்களில் கேட்டுக் கொள்வது உண்டு நான் என்ன செய்தேன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை என்று.
அப்படியாக ராமாயணத்தில் ஸ்ரீ ராமபிரானுக்கும் நமக்கு ஏற்பட்ட சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அவர் தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக குருவைத் தேடிப் போகிறார். அவர் ஒரு நாள் வசிஷ்டரை பார்த்து விதி என்றால் என்ன? அதிர்ஷ்டம் என்றால் என்ன ?என்று கேட்கிறார்.
அதற்கு வசிஷ்டர் ராமா ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்க கூடிய இன்ப துன்பங்களை தான் விதி என்று சொல்லுகின்றோம் அதிர்ஷ்டம் என்றும் சொல்லுகின்றோம் என்கிறார். அதாவது ஒருவருடைய செயல்களாலும் மனதளவிலும் செய்யக்கூடிய காரியங்கள் தான் அவனுடைய கர்ம வினைகளாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறுகிறது என்கிறார்.
ஆக ஒரு மனிதனை அவனுடைய முன் ஜென்ம கர்மவினைகள் நல்ல வழியிலோ தீயவழியிலோஅழைத்து செல்கிறது. அதை அவன் தான் தடுத்து நிறுத்தவும் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தை அவன் குறைப்பதற்கும் நிறைய முயற்சிகள் எடுக்கலாம். அதில் ஒன்றுதான் ஆன்மீகமும் என்கிறார் வசிஷ்டர்.
மேலும் மனிதன் எதை நோக்கி அவனை அவனுடைய எண்ணத்தை செலுத்துகின்றானோ அவன் அதுவாகவே மாறுகின்றான். அதனால் தான் செயலிலும் எண்ணங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆக ராமனிடம் வசிஷ்டர் உன்னுடைய முயற்சியை கொண்டு இயந்திரங்களை அடக்கி துன்பமில்லாத பதவியை அடை என்கிறார் . ஸ்ரீ ராமருக்கு மட்டுமல்ல வசிஷ்டர் நமக்கும் சேர்த்துதான் சொல்கிறார். எப்பொழுதும் நம்முடைய எண்ணங்களிலும் செயல்களிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். காரணம் அவை தான் பிற்காலங்களில் நமக்கு விதியாக மாறி செயல்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







