நீங்கள் கும்ப ராசியில் பிறந்த ஆண்களா? உங்கள் வாழ்க்கை கரும பலன் இதுதான்
சனி பகவானுடைய வீடான கும்பராசியில் பிறந்தவர்கள் உழைப்பிற்கு பெயர் போனவர்கள். அதேபோல், கும்பராசிக்கு சுக்கிரன் பாதகாதிபதியாக இருப்பதால் இவர்கள் வாழ்க்கையில் சில சவால்களை இவர்கள் இயற்கையாகவே பெற்றிருப்பார்கள்.
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் என்பதால் இவர்கள் பொருள் அதிகாரம் போன்ற விஷயங்களுக்கு பின்னால் செல்லும் பொழுது இவர்கள் வாழ்க்கை அபாயமான நிலைக்கு செல்லக்கூடியதை நாம் பார்க்க முடிகிறது. இவர்களுடைய ஆரோக்கியத்தை பொருத்தவரை இவர்களுக்கு உணவு கட்டுப்பாடு அவசியம்.
நீர் சார்ந்த ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் மூட்டு வலி இவர்கள் அடிக்கடி சந்திக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. மேலும், கும்ப ராசியில் பிறந்த ஆண்கள் மனைவியுடன் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.
கும்ப ராசியில் பிறந்தவர்கள் உணவு மற்றும் ஹோட்டல் துறை, கார் சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு சிறப்பு பலனை பெற்றுக் கொடுக்கும். அதோடு ஆடிட்டிங், நிதி மேலாண்மை மற்றும் ஆன்மீக சார்ந்த துறைகளும் இவர்களுக்கு சாதகமாக அமையும். இவர்களுடைய வாழ்க்கையில் ஆன்மீக பாதையை நோக்கி செல்லும் பொழுது இவர்கள் மன நிம்மதி அடைகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் எந்த காலத்திலும் பொய் சொல்வதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் பொய் சொல்லுகின்ற பொழுது கடுமையான பாதிப்புகளை சனி பகவானால் பெற்று விடுகிறார்கள். கும்ப ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை எளிதாக நம்பி மோசம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் ஞானம் அல்லது ஆன்மீகத் தேடல் ஏற்படும். மேலும், கும்ப ராசியினர் எந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் இவர்களுடைய தர்ம பலன் என்ன என்பதை முழு காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்,