2026 அமாவாசை :தோஷம் விலக இன்று செய்ய வேண்டிய முக்கியமான 12 தானங்கள்

By Sakthi Raj Jun 14, 2026 04:31 AM GMT
Report

 நம்முடைய இந்து மதத்தில் அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது அதாவது சந்திரனும் சூரியனும் சேரக்கூடிய திதியை நாம் அமாவாசை என்கின்றோம். இந்த நாளில் பித்ருக்கள் பூமிக்கு அருகில் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு செய்யக்கூடிய பரிகாரம் மற்றும் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதனால் இந்த நாட்களில் நம்முடைய தோஷம் யாவும் விலகும் என்று நம்பப்படுகிறது. இந்த அமாவாசை தினத்தை நம் சரியாக பயன்படுத்தி விட்டால் நம்முடைய வாழ்க்கை வளமாக மாறும். அந்த வகையில் அமாவாசை நாட்களில் நாம் செய்ய வேண்டிய தானங்கள் அதனுடைய பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

2026 அமாவாசை :தோஷம் விலக இன்று செய்ய வேண்டிய முக்கியமான 12 தானங்கள் | 12 Donation To Give On Amvasya For Dosha Relief

நிறைய சொத்துக்களை சேர்க்கக்கூடிய யோகம் உள்ள ராசிகள் யார் தெரியுமா?

நிறைய சொத்துக்களை சேர்க்கக்கூடிய யோகம் உள்ள ராசிகள் யார் தெரியுமா?

செய்ய வேண்டிய தானங்கள்:

அன்னம்:

தீராத கடன், வறுமை இருந்தால் அன்னம் தானம் செய்யலாம். உடனடியாக நல்ல மாற்றத்தை பெறுவீர்கள்.

துணி :

அமாவாசையில் பித்துருக்கள் பூமிக்கு அருகில் வருவதால் இந்த காலகட்டங்களில் ஆடை தானம் செய்யும் பொழுது நமக்கு பித்ருக்களின் ஆசிர்வாதத்தால் நல்ல ஆயுள் கிடைக்கும்.

தேன் :

நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்துபவர்கள் இந்த நாளில் தேன் தானம் செய்யும் பொழுது புத்திர பாக்கியம் கிடைக்கும்.

தீபம்:

தீபம் ஏற்றி ழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் விலகும். கண் பார்வை தெளிவாகும்.

அரிசி:

அமாவாசை நாளில் அரிசி தானம் செய்யும் பொழுது நம்முடைய பாவங்கள் எல்லாம் அழிகிறது.

பால்:

பால் தானம் செய்யும் பொழுது நம்முடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய துக்கம் விலகி மனத்தெளிவு கிடைக்கும். தயிர்: தயிர் தானம் செய்யும் பொழுது நமக்கு சுகமான வாழ்க்கை கிடைக்கும்.

பழங்கள்:

பழங்களை அமாவாசை தினத்தில் தானம் செய்யும் பொழுது எல்லா வளமும் உண்டாகும்.

தங்கம்:

அமாவாசை தினத்தில் ஏழை எளியவர்களுக்கு முடிந்தளவுக்கு தங்கம் தானம் செய்தால் குடும்பத்தை சூழ்ந்து உள்ள தோஷம் விலகும்.

இந்த கிழமையில் தவறியும் இந்த தெய்வத்தை வழிபாடு செய்து விடாதீர்கள்

இந்த கிழமையில் தவறியும் இந்த தெய்வத்தை வழிபாடு செய்து விடாதீர்கள்

வெள்ளி:

அமாவாசை நாளில் கோவில்களுக்கு வெள்ளியில் ஏதேனும் தானம் கொடுத்தால் மன கவலைகள் விலகும்.

பசு :

அம்மாவாசை நாளில் மிகவும் முக்கியமான தானமாக பசு தானம் இருக்கிறது. இந்த நாளில் நாம் பசு தானம் செய்யும் பொழுது ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் விலகும்.

தேங்காய்:

அமாவாசை நாளில் தேங்காய் தானம் செய்யும் பொழுது நினைத்த காரியம் நிறைவேறும்.

மேலும், அமாவாசை தினத்தில் மிக முக்கியமாக பசுவிற்கு உணவளிக்கும் பொழுது தானம் கொடுத்த முழு பலனையும் நாம் பெறலாம். அதுவும் கன்று உடன் இருக்கக்கூடிய பசுவிற்கு தானம் தானம் அளித்தல் மிகவும் நல்லது.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US