ஜாதகத்தில் களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் இருந்தால் என்ன நடக்கும்?

By Sakthi Raj Mar 25, 2026 01:00 PM GMT
Report

ஜோதிடத்தில் களத்திர தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆக இவை இரண்டும் ஒரே தோஷத்தை தான் குறிக்கிறதா? அல்லது இரண்டும் வெவ்வேறு இரண்டு தோஷங்களா? மேலும் இந்த தோஷங்கள் இருந்தால் ஒருவர் வாழ்க்கையில் எந்த மாதிரியான தீய பலன்களை கொடுக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக, களத்திர தோஷம் என்றால் வாழ்க்கை துணை அமைவதில் சற்று சிரமத்தை சந்திக்க கூடும். அதாவது ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாவது இடத்தை குறிக்கக்கூடியது இந்த களஸ்திர ஸ்தானமாகும்.

களத்திர காரகன் சுக்கிரன் ஆவார். ஏழாவது வீட்டிற்குரிய கிரகமோ அல்லது சுக்கிரனோ பாவ கிரகங்களுடன் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்று 6,8,12 -ல் மறைந்தாலும் களத்திர தோஷம் என்று சொல்வார்கள். இதனை செவ்வாய் தோஷம் என்றும் சொல்வார்கள்.

ஜாதகத்தில் களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் இருந்தால் என்ன நடக்கும்? | What Is Mangalya Dosham And Kalathra Dosham

2026 ராமநவமி எப்பொழுது ? ஸ்ரீ ராமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 குணங்கள்

2026 ராமநவமி எப்பொழுது ? ஸ்ரீ ராமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 குணங்கள்

அதாவது ஒரு லக்னம் சந்திரன் சுக்கிரன் ஆகியவற்றுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அதை நாம் செவ்வாய் தோஷமாக எடுத்துக் கொள்ள வேண்டும். லக்னத்தில் செவ்வாய் இருந்தாலும் அது தோஷத்தையே குறிக்கிறது. இருப்பினும் செவ்வாயுடன், குரு, சனி, சூரியன் ஆகியவை சேர்க்கை பெற்றோ அல்லது பார்வை இருந்தாலும் அந்த தோஷம் நிவர்த்தி ஆகிறது.

இந்த களத்திர தோஷம் இருப்பவர்களுக்கு திருமணம் தாமதமாக நடைபெறுகிறது. அவ்வாறு திருமணம் நடைபெற்றாலும் அதில் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆதலால் திருமணத்திற்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும்.

மனிதன் வாழ்க்கையில் கடக்கவேண்டிய கடினமான அந்த ஒரு நொடி எது தெரியுமா என்ன?

மனிதன் வாழ்க்கையில் கடக்கவேண்டிய கடினமான அந்த ஒரு நொடி எது தெரியுமா என்ன?

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன:

மாங்கல்ய தோஷம் என்பது பெண் ஜாதகத்தில் மட்டுமே பார்க்கக் கூடியதாகும் ஆணுக்கு கிடையாது. அதாவது திருமணம் முடிந்து கணவன் மனைவி எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதை இது குறிக்கிறது.

ஜாதகத்தில் களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் இருந்தால் என்ன நடக்கும்? | What Is Mangalya Dosham And Kalathra Dosham

அதாவது ஒரு பெண் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை தீய பலன்களை குறிக்கிறது. இருப்பினும் அந்த இடத்தை குரு சுக்கிரன் பார்வை பெற்றால் தோஷம் முற்றிலும் விலகும்.

மேலும், ஆண் மற்றும் பெண் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் அவர்கள் இருவரும் நீண்ட ஆயுளுடனும் இணை பிரியாத வாழ்க்கை துணையாகவும் வாழ்வார்கள். அதே வேளையில் பெண்ணிற்கு இந்த நிலை இருந்து ஆணின் ஜாதகத்தில் இந்த நிலை இல்லாமல் இருந்தால் திருமணத்திற்கு பிறகு ஆணிற்கு சில ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம் என்று சொல்லப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US