பிரதமை திதி என்றால் என்ன? அன்று என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?

By Sakthi Raj Apr 13, 2026 10:45 AM GMT
Report

அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்து வரக்கூடிய திதி பிரதமை திதியாகும், இதற்கு முதல் என்பது பொருள். அதாவது அமாவாசைக்கு அடுத்து வருகின்ற பிரதமையை சுக்கில பட்ச பிரதமை என்றும் பௌர்ணமிக்கு அடுத்து வருகின்ற பிரதமையை கிருஷ்ண பட்ச பிரதமை என்றும் சொல்கிறார்கள்.

மேலும் இந்த பிரதமை திதியை ‘பாட்டிமை’ ‘பாட்டிமுகம்’ ‘பாட்டியம்’ ‘பாட்டுவம்’ என்று அழைக்கிறார்கள். அதாவது பௌர்ணமி தினத்திற்கு பிறகு வரக்கூடிய சந்திரன் தேய்வதை அவ்வாறு சொல்கிறார்கள். அப்படியாக இந்த பிரதமை திதியில் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

பிரதமை திதி என்றால் என்ன? அன்று என்ன செய்யலாம்? செய்யக்கூடாது? | What Is Piratimai Thithi And Its Importance

2026: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போகும் தலைவர் இவர்தானாம்

2026: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போகும் தலைவர் இவர்தானாம்

பொதுவாக இந்த பிரதமை திதியில் நாம் எந்த ஒரு காரியமும் செய்யக்கூடாது என்பார்கள். காரணம் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் பூமியில் கதிர்வீச்சு தன்மையும் ஈர்ப்பு விசையும் மாறுபட்டிருக்கும். அதனால் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் கதிர்வீச்சு குன்றுவதால் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது என ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் இந்த பிரதமை திதி முதல் சந்திர நாள் என்பதால் முக்கிய தெய்வம் அக்னியாகும். இந்த நாளில் பூஜைகள் அக்னி வேள்விகள் ஹோமங்கள் மற்றும் மங்கள காரியங்கள் செய்வதற்கு உகந்த நாளாக இருக்கிறது.

பிரதமை திதி என்றால் என்ன? அன்று என்ன செய்யலாம்? செய்யக்கூடாது? | What Is Piratimai Thithi And Its Importance

2026: ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி.. அதிர்ஷ்ட மழை யாருக்கு?

2026: ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி.. அதிர்ஷ்ட மழை யாருக்கு?

இந்த நாளில் நாம் கோமாதாவை வாங்கலாம் மற்றும் பிற மதச் சடங்குகளை செய்யலாம், வீடுகளில் உபகரணங்களை பழுது பார்க்கலாம், பூமி பூஜை போடலாம், கல்வி தொடர்பான பணிகளை செய்யலாம்.

அதோடு வளர்பிறை பிரதமையில் கல்வி தொடர்பான விஷயங்கள் செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக பிரதமை திதியில் நாம் குலதெய்வம் கோயிலுக்கு சென்று மொட்டை போடுவது நல்லது. ஆனால் பிரதமை திதியில் நாம் வெளியூர் பயணங்கள் மற்றும் புதிய செயல்கள் செய்வதை தவிர்த்து விட வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US