மிதுன ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இதனால் கண் திருஷ்டி வருமாம்.. கவனமாக இருங்கள்
ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மிதுன ராசியினர் மிகவும் புத்திசாலித்தனமாக இருப்பார்கள். இருப்பினும் இந்த மிதுன ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தேவையில்லாத கண் திருஷ்டிகள் மற்றும் பாதிப்புகள் வர வாய்ப்புகள் இருப்பதால் இவர்கள் எந்தெந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
பொதுவாகவே மிதுன ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களை பலருக்கும் பிடிப்பதில்லை. காரணம் இவர்கள் மீது நிறைய போட்டி பொறாமைகளோடு இருப்பார்கள். ஆதலால் இவர்கள் எந்த ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் அதை அவர்கள் ரகசியமாக காத்துக் கொள்வது அவசியம் அல்லது தேவை இல்லாத பொறாமைகள் மற்றும் தவறான ஏக்கங்களால் கண் திருஷ்டியால் செய்கின்ற காரியம் பாதையில் நின்றுவிடும்.

அதிலும் குறிப்பாக வண்டி, வாகனம், நிலம், வீடு போன்ற விஷயங்கள் நீங்கள் புதிதாக வாங்க விரும்புகின்ற பொழுது அதை செய்து முடித்த பிறகு பிறரிடம் சொல்வது நல்லது. மேலும் மிதுன ராசி மற்றும் மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் மீது பொருட்களால் மட்டும் அல்லாமல் இவர்களுடைய கல்வியால் கூட மற்றவர்கள் பொறாமை எண்ணம் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கு தாய் தந்தையர் உடன் பிறந்தவர்களால் கூட சமயங்களில் கண்திருஷ்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக மற்றும் சுகபோக வாழ்க்கை வாழ்வதை இவர் சொந்தங்கள் விரும்ப மாட்டார்கள்.
அப்படியாக இவர்கள் வாழ்க்கையில் கண் திருஷ்டி மற்றும் பிறருடைய போட்டி பொறாமைகளிலிருந்து விடுபட முடிந்தவரை ஒரு விஷயம் நடக்கும் முன் வரை யாரிடமும் சொல்லாமல் இருப்பது மிக மிக அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |