2026: அட்சய திருதியை அன்று உருவாகும் 7 ராஜ யோகங்கள்.. உயரத்தை தொடும் 3 ராசிகள்
2026 ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டின் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய வளர்பிறையில் மூன்றாவது நாள் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த அட்சய திருதியை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
அதாவது இந்த நாளில் நாம் எந்த முக்கிய காரியங்களை தொடங்கினாலும் அவை மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் நமக்கு பெற்று கொடுக்கும என்பது நம்பிக்கை. அப்படியாக அட்சய திருதியை அன்று பலரும் முடிந்த அளவிற்கு ஏதேனும் ஒரு தங்க நகையோ வெள்ளி பொருட்கள் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
அன்றைய நாள் வாங்கக்கூடிய எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அவை மிகப்பெரிய அளவில் இரட்டிப்பு பலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை. அப்படியாக ஜோதிட ரீதியாக அட்சய திருதியையில் மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அன்றைய நாள் ஏழு ராஜ யோகங்கள் உருவாகின்றது.
ஏப்ரல் 19ஆம் தேதி ரவி யோகம், கஜகேசரி யோகம், திரிபுஷ்கர யோகம், சர்வார்த்த சித்தி யோகம், சச யோகம், மாளவ்ய யோகம், லட்சுமி நாராயண யோகம், அட்சய யோகம் ஆகிய யோகங்கள் அட்சய திருதியை நாளில் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிகள் மிகப்பெரிய அளவில் நன்மைகள் பெறப்போகிறார்களாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியையில் உருவாகக்கூடிய இந்த ஏழு ராஜயோகம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு அதிக அளவிலான நேர்மறை பலன்களை கொடுக்கும். சிலருக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக முடியாத முக்கியமான வேலை ஒன்றை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிக லாபத்தை பெறக்கூடிய காலகட்டமாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் செல்வம் அதிர்ஷ்டம் அதிகரிக்கப்போகிறது. மேலும் இவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து புதிய திட்டங்கள் செயல் படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கப்பபோகிறது.
நீங்கள் நினைத்த காரியங்களை நினைத்த நேரத்தில் முடிக்கக்கூடிய பாக்கியத்தை பெறுவீர்கள். குடும்பத்தார் சுகாரிய நிகழ்ச்சிகள் எந்த தடையும் இல்லாமல் நடக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு தொந்தரவு செய்தவர்கள் விலகிச் செல்வார்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியையில் உருவாகும் 7 ராஜயோகங்கள் இவர்களுக்கு வாழ்க்கையில் சந்திக்கிற சிறு சிறு பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்கப்போகிறது. குடும்பத்தில் உள்ள மனப் பிரச்சனை ஒரு நல்ல முடிவைப் பெறும்.
வீட்டிற்கு விருந்தினர்கள் வருகையால் மன மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களால் பொருளாதார உதவியை பெறுவீர்கள். பங்கு சந்தைகள் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல அற்புதமான காலகட்டமாக அமையப்போகிறது. எதிர்பாராத நேரத்தில் செல்வவளம் அதிகரிக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |