நீங்கள் துலாம் ராசியா? உங்களுக்கு காதல் திருமணம் கைக்கொடுக்குமா?

By Sakthi Raj Sep 02, 2026 04:56 AM GMT
Report

  ஜோதிடத்தில் 7 வீடான துலாம் ராசி சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட ராசியினர். மேலும், துலாம் ராசியில் தான் சனி பகவான் உச்சம் அடைகிறார். அதனால், இவர்கள் எப்பொழுதும் நீதி நேர்மை என்று சமநிலையோடு செயல்படக்கூடியவர்கள். அந்த வகையில், துலாம் ராசியினருக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

துலாம் ராசியினர் இயல்பாகவே மிகுந்த அன்பும் புரிதலும் கொண்டிருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்வதையோ அல்லது திருமணத்திற்கு பிறகு காதல் செய்வதையே விரும்புகிறார்கள்.

மேலும், துலாம் ராசிக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் செய்வது அவ்வளவு பொருத்தமாக அமைவதில்லை.

செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயர் வழிபாட்டிற்கு ஏன் எவ்வளவு சிறப்புகள் தெரியுமா?

செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயர் வழிபாட்டிற்கு ஏன் எவ்வளவு சிறப்புகள் தெரியுமா?

பெண்களாக இருந்தால் 26 வயதிற்கு பிறக்கும் ஆண்களாக இருந்தால் 29 வயதிற்கு பிறகும் திருமணம் செய்வது சிறப்பாக அமைகிறது.

மேலும், இவர்கள் சுதந்திரத்தை மிகப்பெரிய அளவில் விரும்பக் கூடியவர்கள். உறவு ரீதியாக முழு ஈடுபாட்டோடு இருந்தாலும் அவர்கள் தங்களுடைய சுதந்திரம் எந்த நிலையிலும் பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள்.

மேலும், துலாம் ராசிக்கு சிறந்த ஜோடி பொருத்தமாக கும்பம் அல்லது மேஷ ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் துலாம் ராசியின் உணர்வுகளை புரிந்து கொள்கிறார்கள். குறிப்பாக, இவர்களுக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் கிரகங்கள் அமையும் போது திருமண வாழ்க்கையில் அதிக பொறுமை மற்றும் விட்டுக்கொடுத்து செல்வது அவசியமாக இருக்கிறது.

இவர்கள் திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபாடு செய்வது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை பெற்றுக் கொடுக்கும். அதோடு இவர்கள் குடும்பப் பெண்களை சரியாக நடத்துவதும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பள்ளியரை பூஜை போன்ற விசேஷங்களில் கலந்து கொள்வதும் சிறப்பை பெற்றுக் கொடுக்கும்.

மேலும், துலாம் ராசியினருக்கு அவர்களுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.    


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US