மேஷ ராசியினரின் வாழ நாள் கர்ம பலன்கள் என்ன தெரியுமா ?
மேஷ ராசியினர் உடைய அதிபதி செவ்வாய் பகவான். அதனால் இவர்களுக்கு அதிக அளவில் கோபமும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய குணமும் இருக்கும். இருப்பினும் அதை பக்குவமாக கையாளக்கூடிய திறனும் கொண்டிருப்பார்கள்.
மேஷ ராசியினர் ஒருவருக்கு உதவி செய்யும் பொழுது அவர்கள் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தவறுகள் நடந்தால் இது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் கர்ம வினையாக மாறிவிடும். மேலும், மேஷ ராசியை பொறுத்தவரை இவர்கள் இளமை காலத்திலே காதலில் விழுந்து விடுகிறார்கள்.
ஆதலால் காதல் திருமணம் செய்வதற்கு இவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் வாழ்க்கை துணையின் குடும்பத்தினால் சில பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள்.
மேஷ ராசியினருக்கு எப்பொழுதும் பணவரவில் அவர்களுக்கு எந்த தொந்தரவும் இருப்பதில்லை. அதை போல் இவர்கள் ஏதாவது ஒரு வகையில் உழைத்து பணத்தை சம்பாதித்து கொண்டு இருப்பார்கள். இருப்பினும் பல நேரங்களில் இவர்கள் வாழ்க்கை முழுவதும் கடன் தொகை செலுத்தக்கூடிய நிலையும் வருகிறது.
அதோடு மேஷ ராசியினருக்கு 25 வயதிற்கு மேலாக இவர்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகம் இருக்கிறது. அதை போல் தர்ம காரியங்கள் செய்வதையும் இவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
இவர்கள் வாழ்க்கையில் சந்திக்க கூடிய கர்ம பலன்களில் இருந்து விடுபட அவர்கள் சனிபகவானை வழிபாடு செய்யலாம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் பொழுது கர்மப்பலன் குறைகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |