ஜோதிடம்: பெண் பிள்ளைகள் வெள்ளிக்கிழமை பிறந்தால் வீட்டுக்கு ஆகாதா?
பொதுவாக, வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த தினமாக பார்க்கப்படுகிறது. நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் வெள்ளிக்கிழமை குழந்தைகள் பிறந்தால் அவ்வளவு உயர்ந்தது அல்ல என்று சொல்லப்படுவது உண்டு.
அந்த வகையில், பெண் பிள்ளைகள் வெள்ளிக்கிழமை பிறந்தால் நல்லதா அல்லது எதிர்மறை ஆற்றல் கொண்டதா? என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாகவே, பெண் குழந்தைகள் பிறந்த பிறகு அந்த குடும்பத்தில் நல்ல பொருளாதாரம் முன்னேற்றம் வருவதை நாம் காண முடிகிறது.
அதனால் பெண் பிள்ளைகளை மகாலட்சுமி அம்சமாக கருதுகின்றோம். அதே போல், எண் கடிதத்தின் படி 4,12, 13 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பிறக்கக்கூடிய பெண் குழந்தைகள் ஒரு அதிர்ஷ்டமான குழந்தைகளாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.
இருப்பினும் அவர்கள் மணம் முடித்து திருமணத்திற்கு பிறகு சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், பெண் குழந்தை திங்கள், புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் பிறப்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.
அதேபோல் 5 பெண் குழந்தைகள் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்கின்ற ஒரு பழமொழி இருப்பது உண்மை அல்ல.
பெண் பிள்ளைகள் பல இருக்கின்ற குடும்பத்தில் மிக வசதியாக இருக்கின்ற குடும்பங்களும் இருக்கிறது என்று பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் அது இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |