வாழ்க்கையின் நோக்கம் என்ன?
உலகத்துல பொறந்த மக்கள் எல்லாரும் அதிகமா சொன்ன வார்தகள் ல முக்கியமான சில வார்தைகள் என்னாடா. வாழ்கை இது... எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது... நான் வாழ்கைல நிறைய அடிபட்டுட்டேன்... போதும்... நம்மல்ல நிறைய பேர் இத சொல்லிருப்போம்.
வாழ்கை எதுக்கு., நாமல்லாம் ஏன் இவ்ளோ கஷ்டபடுறோம்., இதுக்கு பதில் தேடி போனவங்க பதில் கிடைச்சதும் ஞானிகளா உலகத்தால பார்கப்பட்டாங்க., இந்த வாழ்கை எதுக்காக?
ஒரு உதாரணத்தோட பாக்கலாம் நீங்க மதுரையில பிறந்தவர் னு வச்சிக்குவோம் வேலை பாக்குற்துக்காக சென்னை வரீங்க, வேற வேலைக்காக பெங்களூர் போறீங்க, வெளி நாடுக்கும் போறீங்க.
எங்க போனாலும் நீங்க எங்க இருந்து வரீங்க னு கேட்டா என்ன சொல்வீங்க., கடைசியா இருந்து வந்த இடத்த சொல்வீங்களா..? மதுரையில இருந்து வந்தேன் னு சொல்வீங்களா..
? இதே கேல்விய் இப்போ வாழ்கையோட ஒப்பிட்டு கேட்டு பாருங்க., உங்க உயிர் இப்போ ஒரு உடம்பில தங்கி இருக்கு இதுக்கு முன்னாடி எத்தனை உடம்பு எடுத்துச்சுனும் தெரியாது எத்தனை உடம்பு எடுக்க போகுதுனும் தெரியாது
எப்படியும் இந்த வீட்டயும் காலி செஞ்சி தான் ஆகனும் அந்த நாளும் எல்லாருக்கும் வந்தே தீரும் னு மட்டும் நல்லா தெரியும் அப்டி இருக்கும் பட்சத்தில இப்போதைக்கு நாம உயிர் மட்டும் தான் இந்த உடம்பு என்னோட எத்தனையோ வீடுகள் ல ஒரு வீடு தான் என்றால் நம்ம உம்மையான Address எது?
இந்த வீட்டுக்கு வரத்துக்கு முன்னாடி ஏதோ ஒரு வீட்டில இருந்தா மாதிரி ஆரம்பத்தில நம்முடையது னு ஒரு வீடு இருந்து இருக்கனும் ல அந்த வீட்ட மறந்தது தான் நாம இப்பொ படுற எல்லா..
அவஸ்தைக்கும் காரணம் நாம எல்லாரும் சொந்த வீட்ட விட்டு வந்து திரும்பி போக வழி தெரியாம இப்போ இருக்குற வீட்டை சொந்த வீடு னு நினைச்சி ஏமாந்து போறோம்..
இந்த புள்ளியில் ஆரம்பிச்சு அந்த புள்ளியில முடியிறதுக்குள்ள எவ்வளவு போராட்டங்கள், வலிகள், விருப்பு வெறுப்புகள், துரோகங்கள், வெற்றி தோல்விகள், பொறாமைகள், இத தான் "வந்த வேலைய விட்டுட்டு சொந்த வேலைய பாத்தான்" னு பழமொழியா சொல்லி வச்சாங்க நாம பிறந்ததன் நோக்கமே மீண்டும் பிறவா நிலை அடைய தான் பிறப்பும் இறப்பும் இல்லா பெரு வாழ்வு எப்படி கிடைக்கும்? கிடைக்குமா என்ற சந்தேகத்திலயே பல ஜென்மம் ஓடி போகிடுது.
மத்த உயிர்களுக்கு இல்லாத ஒன்னு மனிதர்களுக்கு இருக்கு அதுக்கு பேர் தான் மனம் உயிரின் படர்கை நிலை தான் மனம் னு வேதாத்ரி மகரிஷி சொல்றார் Extended version of Soul உடம்பை எடுத்த உயிர் இந்த உடலால சுக துக்க இன்பங்களை அனுபவிச்சு, அதன் மூலமா தனக்கு கிடச்ச அனுபவங்களை வச்சு மத்தவங்க மற்றும் வாழ்க்கை பத்தின கோட்ப்பாடுகள உருவாக்கிக்கிட்டு தான் தனது னு எல்லைகட்டி அதுக்குள்ளயே அடங்கி தன்முனைப்போட நின்னுடுது உயிர் பத்தியும், பிறப்பு இறப்பு ரகசியம் பத்தியும் எழுதின சித்தர்களோட பாடல்கள நாம புரிஞ்சிக்க முடியாம போறதுக்கு காரணம் என்ன தெரியுமா?
நமக்கு புரியாத தெரியாத விஷயத பத்தி யாராவது சொன்னால் நாம அத கவனிக்காம ஆராய்ச்சி மனப்பான்மை ல இருந்து அனுகுறோம், அவங்கள சொல்ற விஷயத்த சோதிக்கனும் னா அவங்க அளவுக்கு நமக்கு அனுபவமும் பக்குவமும் இருக்கனும்
அவங்க என்ன சொல்ல வராங்க னு புரிஞ்சிக முயற்சி பன்னாலே பாதி தெளிவு கிடச்சிடும் Back to the topic அதல்லாம் இருக்கட்டும்
இப்போ எனக்கு இருக்குற பிரச்சினைகள் எல்லாம் சரியாக நான் என்ன பன்னனும் நு கேட்டா நீங்க எதுவும் பன்னாம இருந்தாலே போதும் என்றது தான் பதில் உங்களுக்கு என்ன தேவையோ அதுக்கு ஏத்த மாதிரி உங்க வாழ்கை வடிவமைக்கப்பட்டு இருக்கு, நீங்க உங்க வசதிக்கு ஏற்ற மாதிரி வேற Design அ set பன்னீங்கனா
அதுக்கான side effects அயும் ஏத்துக்கிட்டு தான் ஆகனும் நான் குப்பைய மட்டும் போடுவேன் சுத்தம் பன்ன மாட்டேன் ஆனா என் அறை சுத்தமா இருக்கனும் நு சொன்னா எப்டி நடக்கும்..??
வாழ்கையில் நமக்கு நடக்குற பிரச்சினைகளுக்கு நாம தான் காரணம் னு ஏத்துக்கிட்டு வாழ்ற பக்குவம் வந்தா தான் உங்களுக்கான வழி என்ன னு கண்டுபிடிக்குற வாய்ப்பே கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |