நதிகளை பெண் தெய்வமாக கருதுவது ஏன்?
இயற்கை தான் கடவுள் என்றே சொல்லலாம்.அதாவது இயற்கையிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது.
பாவம் புண்ணியம் என்று நாம் எதை செய்தாலும் அதை இயற்க்கை நமக்கு திரும்ப கொடுத்து விடும்.நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு பாடம் இயற்கையிடம் இருந்து கற்று கொள்ளலாம்.
அதாவது பெண்கள் இயற்கையில் எத்தனை முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் எப்படி போற்றி வழிபடவேண்டும்,என்பதை எல்லாம் இயற்கை பாடமாக அதனுள் வைத்து இருக்கிறது.
மேலும் கணவன் மனைவி பந்தம் இந்த உலகில் எவ்வளவு புனிதமானது என்றும்,இந்த உலகத்தில் மிக பெரிய கொடியது அவர்களை பிரித்தல் என்பதை உணர்த்தும் வகையில் நதிகள் அமைந்து இருக்கிறது.
அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக நதிகள் என்றாலே அதற்கு பெண்ணின் பெயரை சூட்டி, அதை பெண் தெய்வமாகவே போற்றி வழிபடுவோம். அதாவது சமுத்திரத்தை ஆண் ஸ்வரூபமாகவும்,நதிகளை பெண் ஸ்வரூபமாகவும் சாஸ்திரம் கூறுகிறது.
அதனால் தான் சமுத்திரத்தை சமுத்திரராஜன் என்றும் நதிகளை பெண் வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது.நுட்பமாக கவனித்தால்,அனைத்துமே வருணனின் வடிவங்கள் தான்.சமுத்திரராஜன் என்றால் வருணன்.
இந்த பெண் நதிகள் அனைத்தும் தன் கணவனை அடையும் விதமாக சமுத்திரராஜனை அடைய வேண்டும் என்பது இயற்கையின் நியதி.
அதனால் எக்காரணம் கொண்டும் அந்த நதிகளை தடுக்கக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஆனால் நாம் அந்த நதி நீரை பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர,சமுத்திரராஜனிடம் சென்றடையும் நதியை மட்டும் தடுக்க கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
எனவே தான் நதிகளுக்கு பெண்ணின் பெயரை சூட்டி,அதை பெண் தெய்வமாக வழிபடுகிறோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |