வாஸ்து பிரச்சனையால் எந்த அளவிற்கு நமக்கு பாதிப்புகள் உண்டாகும்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையை வாழ நல்ல குடும்பம், நிம்மதியான மனநிலை, ஆரோக்கியமான உடல் மற்றும் கடன் இல்லாத பொருளாதாரம் அவசியம். இதில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டாலும் நம்முடைய வாழ்க்கையில் தடுமாற்றம் உண்டாகும்.
அந்த வகையில் வாஸ்துவிற்கு நாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? என்றால், நம்முடைய விதி ஒரு பக்கம் இருந்தாலும், வாஸ்து சரி இல்லாத இடத்தில் அமரும் பொழுது அந்த கெட்ட நேரம் பல மடங்கு செயல்பட வாய்ப்புகள் உள்ளது.
அதனால், வீட்டில் பொருளாதார நிலையில் மாற்றம், ஆரோக்கிய குறைபாடுகள், நிம்மதியின்மை போன்ற சூழல் உண்டாகும். ஏன் வாஸ்து சரி இல்லாத வீட்டில் குடியேறி அவர்கள் வாழ்க்கையில் பல விஷயங்கள் இழந்தவர்களை நாம் பார்க்கமுடியும்.
நன்றாக வாழ்ந்த கணவன் மனைவி இடையே பிரிவு, குடும்பத்தில் ஏதேனும் திடீர் இழப்புகள் போன்ற சூழல் இந்த வாஸ்து குறைபாட்டால் உருவாகிறது.மேலும், பெண்களுக்கு வாஸ்து பிரச்சனையால் கர்ப்பப்பை குறைபாடுகளும் ஏற்படலாம் என்கிறார்கள்.
அப்படியாக, வாஸ்து சரி இல்லாத வீட்டில் வாழ்பவர்களுக்கு என்ன தீர்வு? அவர்கள் எந்த ஆலயம் சென்று வழிபாடு செய்யவேண்டும்? என்று பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |