நமக்கு கர்மா சொல்லும் ஆழமான உண்மை என்ன தெரியுமா?
இந்த உலகம் என்று சொல்லக்கூடிய இந்த பிரபஞ்சம் மிகவும் அழகாக படைக்கப்பட்டவை. அதை நாம் நுணுக்கமாக கவனிக்கும் பொழுது பல ஆச்சரியங்களும் பல வருத்தங்களும் நிறைந்திருப்பதை நாம் பார்க்கலாம்.
இந்த உலகத்தில் யாரும் எதிலிருந்தும் தப்பவே முடியாது என்பது மட்டும் தான் இறுதியில் உண்மையாகவே இருக்கிறது.
அதுதான் மரணம். அந்த வகையில், இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று நம் எல்லோரும் நம்பக் கூடிய அந்த கர்மா என்கின்ற ஒரு விஷயம் நமக்கு நிறைய உண்மைகளை சொல்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

நாம் இந்த பிறவியில் செய்யக்கூடிய எந்த செயலுக்கும் பலன் இருக்கிறது. அது நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் காலம் தாமதித்தாலும் அதற்குரிய பலன் கட்டாயம் பெறுவோம். அதேபோல், நல்ல செயல்கள் நமக்கு தாமதமாக வந்தாலும் நிச்சயம் நன்மையாகவே நமக்கு திரும்பி வரும்.
அதை போல் தவறான செயல்கள் எவ்வளவு தூரம் தாக்கத்தை உண்டு செய்தாலும் அவர்களுக்குரிய பலன் அவர்களுக்கு தாமதமானாலும் நிச்சயம் விளைவுகளை ஒருநாள் அவர்கள் அனுபவித்தாக வேண்டும். கர்மா மிகவும் நீதியானது.
யாரிடமும் தவறாக நடந்து கொள்ளாது. யாரும் அதனிடமிருந்து தப்பவும் முடியாது. சிந்தனைக்கும் செயலுக்கும் கட்டாயமாக ஒரு நாள் அந்த கர்மா என்கின்ற ஒரு சுழற்சிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |