ஒவ்வொரு மனிதனுடைய உண்மையான சொத்து என்ன தெரியுமா ?
இந்த உலகம் நிரந்தரமற்றது. மனிதர்கள் எல்லோரும் கட்டாயமாக ஒரு நாள் இறக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். சொந்தம் என்ற பந்தம் கலைந்தாக வேண்டும். உடல் என்ற அந்த மாயை கட்டாயம் ஐம்பூதங்களுடன் இணைந்தாக வேண்டும்.
இதுதான் உலகத்தில் நியதி. அப்படியாக, மனிதனுக்கு நிரந்தரமற்ற ஒன்று என்று தெரிந்தும் அவனால் எதற்கு அவனை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. அவனால் எதற்கு இன்னும் உண்மையை புரிந்து கொள்ள முடியவில்லை.

இல்லாத ஒன்றுக்காக ஓடும் தன்மையை ஏன் அவன் வளர்த்துக் கொள்கிறான். இதைத்தான் நாம் கர்ம வினை என்று சொல்கிறோம். உண்மையை தவிர்த்து பொய்களை நாடிச் செல்லும் மனிதனுடைய மனதிற்கு தெரியவில்லை எது உண்மையான சொத்து?
எந்த சொத்து உண்மையில் அவனை காப்பாற்ற போகிறது ? எந்த சொத்து அவனுக்கு சிம்மாசனம் கொடுத்து அவனை வாழ வைக்க போகிறது? எந்த சொத்து அவனுக்கு கிரீடமும் எந்த சொத்து அவனுக்கு பெயரும் புகழும் கொடுக்கப் போகிறது என்று தெரியாமலே அவன் ஒரு மாயை நோக்கி ஓடுகின்றான். அப்படியாக, மனிதனுடைய உண்மையான சொத்து என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் நான் வாழும் காலத்தில் எனக்கு இத்தனை கட்டு பணம் வேண்டும். இத்தனை அடுக்குமாடிகள் கொண்ட வீடுகள் வேண்டும். இத்தனை பரப்பளவில் நிலம் வேண்டும் என்று. ஆனால் என்றாவது ஒருநாள் இறைவனே நான் இதுவரை சம்பாதித்த கர்ம வினைகள் போதும்.
மீண்டும் என் வாழ்வில் கர்ம வினைகள் சம்பாதித்து விடக்கூடாது என்று என்றாவது நாம் நினைத்தது உண்டா? இங்குதான் மனிதர்களுடைய கர்ம வினையின் கணக்குகள் இன்னும் அதிகரிக்க துவங்குகிறது. நீங்கள் உண்மையாகவே ஒரு ராஜ வாழ்க்கை வாழ வேண்டும்.

நீங்கள் ஒரு மிகப்பெரிய செல்வந்தராக வாழ வேண்டும். நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் கட்டாயமாக இருக்கின்ற வாழ்வில் ஒருவரை தாழ்த்தி பேசாமல், ஒருவரிடம் சண்டையிடாமல், சொத்துக்களை அபகரிக்காமல் ஒருவரின் வாழ்க்கையை நாசம் செய்யாமல், எல்லா உயிர்களையும் சமமாக நினைத்து பாவிக்க கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொண்டும் அடையாளமே நமக்கு தர முடியாது என்கின்ற வெறும் காசுகளையும் தங்கங்களையும் நிலங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு இல்லாமல் இறந்தும் நமக்கு அடையாளம் கொடுக்கக்கூடிய இறை வழிபாட்டை நோக்கி செல்லுங்கள்.
தானமும் புண்ணியமும் சேர்த்து வாழுங்கள். இந்த ஒரு நிரந்தரமான சொத்துதான் உங்களுடைய அடையாளங்களை எல்லா பிறவிகளிலும் நீங்கள் யார் என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்ட போகிறது. இதுவே நீங்கள் சம்பாதிக்க கூடிய நிரந்தரமான சொத்துக்கள் ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |