எது உண்மையான பக்தி?கிருஷ்ணர் கூறும் பதில்
பொதுவாக மனிதன் தனக்குகொரு உலகம் அமைத்து அதில் தாம் மட்டுமே வாழ்வதாக எண்ணுவதுண்டு.அதனால் அவன் சிறு விஷயங்களுக்கும் சலித்து கொண்டும் துன்புறுவதையும் நாம் பார்க்க முடியும்.அப்படியாக இறைவனை உலகமே தரிசித்தாலும் சமயங்களில் அவர் நமக்கு மட்டும் தான் என்ற உணர்வு உண்டாகும்.
இது அன்பின் வெளிப்பட்டால் ஏற்படும் உணர்வு என்று எடுத்தே கொள்ளலாம்.ஆனால் அந்த உணர்வு சற்று அதிகம் ஆகும் பொழுது அதுவே ஆணவம் ஆகி விடும்.இப்படித்தான் திரௌபதி அவர் கண்ணன் மீது அதீத அன்பால் அவர் பக்தியில் சற்று ஆணவம் அதிகம் ஏற்பட்டு விட்டது.
இதை கவனித்து கொண்டு இருந்த கிருஷ்ணர் திரௌபதிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். திரௌபதிக்கு எப்பொழுதும் ஒரு எண்ணம் உண்டு.
அதாவது இந்த உலகத்தில் கிருஷ்ணர் மீது அதிக அன்பும் பக்தியும் வைத்திருப்பது நான் மட்டும் தான்.என்னை விட யாரும் கிருஷ்ணர் மீது அதிக பக்தி கொண்டு வழிபாடு செய்ய முடியாது என்பது அவளின் எண்ணம். அப்படியாக பாண்டவர்கள் வனவாசம் சென்ற பொழுது திரௌபதி காட்டில் தனியாக குடில் அமைத்து வாழ்ந்து வந்தாள்.
அந்த வேளையில் கிருஷ்ணர் திரௌபதியை பார்க்க வருகிறார்.திரௌபதிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.கிருஷ்ணர் என்னை தேடி,என்னை பார்ப்பதற்கு நெடுந்தூரம் நடந்து வந்திருக்கிறார் என்று.அதனால் திரௌபதி கிருஷ்ணரிடம்,தாங்கள் என்னை காண வெகு தூரம் நடந்து வந்திருக்கிறீர்கள்.
தங்களுக்கு கால் வலிக்கும்.ஆதலால் நான் சூடு தண்ணீர் வைத்து எடுத்து வருகின்றேன் என்று சென்றாள் திரௌபதி. அப்படியாக ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெகு நேரம் ஆகிவிட்டது.ஆனால் தண்ணீர் சூடாகவில்லை.
சிறிது நேரம் கழித்த பிறகு கிருஷ்ணர் அந்த இடத்திற்கு வந்து திரௌபதியிடம் தண்ணீர் தயார் ஆகிவிட்டதா?என்று கேட்க அதற்கு திரௌபதி நடந்ததை சொல்கிறாள். உடனே கிருஷ்ணர் சரி அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீரை கீழே ஊற்றி விடு என்று சொல்ல,அதில் இருந்து ஒரு தவளை தப்பித்து ஓடியது.
அப்பொழுது திரௌபதியிடம் கிருஷ்ணர் சொல்கிறார்,இவ்வளவு நேரம் அந்த தண்ணீருக்குள் இந்த தவளை இருந்தது.மேலும் அந்த தவளை என்னை நோக்கி நான் எப்படியாவது உயிர் பிழைத்து விட வேண்டும் என்று பிராத்தனை செய்து கொண்டு இருந்தது.
யார் என்னை நோக்கி பிராத்தனை செய்தாலும் காப்பாற்றுவது என் பொறுப்பு அதனால் தான் தண்ணீர் சூடாக வில்லை என்று கிருஷ்ணர் சொல்ல,திரௌபதிக்கு மனதிற்குள் தவளையோ!மனிதனோ! பக்தி என்பது எல்லோருக்கும் சமம் தான் போல்.
இறைவன் யாருக்கும் பாரபட்சம் இன்றி அருள்புரிகிறார்,ஆனால் இவ்வளவு காலமாக கிருஷ்ணர் மீது அதீத அன்பும் பக்தியும் வைத்தது நான் மட்டுமே என்று நினைத்திருக்கிறேன் என்று அவள் மீது உள்ள தவறை உணர்கிறாள்.
அப்போது கிருஷ்ணர் திரௌபதியிடம் சொல்கிறார்,மனிதன் தான் பல வேறுபாடுகள் கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.ஆனால் எனக்கு தெரிந்தது தர்மம் அதர்மம் மட்டுமே.இதில் தர்மத்தோடு யார் எதை கேட்டாலும் செய்தாலும் என்னுடைய அருள் நிச்சயம் அவர்களுக்கு இருக்கும்.
அதனால் மனிதன் அவன் என் மீது செலுத்தும் பக்தியில் அன்பு இருக்க வேண்டுமே தவிர ஆணவம் இருக்க கூடாது.அவ்வாறு பக்தி ஆணவம் ஆகும் பொழுது அவர்கள் தான் மன உளைச்சலுக்கு ஆளாக கூடும் என்று சொன்னார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |